Thursday 28 December 2017

2017ஆம் ஆண்டின் சிறந்த ஐந்து கண்டுபிடிப்புகள்




அல்ட்ரா லாக் ஸ்மார்ட் லாக்
வீடு, அலுவலக கதவுகள் பூட்டு போட்டு பூட்டிய பின் சாவியை எங்காவது மறந்து வைத்து விட்டால் பிறகு எங்கு வைத்தோம் என்று தேடுவதிலேயே நேரம் வீணாகும், வைத்த இடம் நினைவுக்கு வராமல், மாற்று சாவியும் பூட்டிய வீட்டுக்குள்  வைத்திருந்தால் அவ்வளவுதான் அன்றோடு அந்த பூட்டின் ஆயுள் முடிந்து விடும்,  இந்த பூட்டு சாவி பிரச்சினைக்கு முடிவு கட்டும் கண்டுபிடிப்பு தான் அல்ட்ரா லாக் ஸ்மார்ட் லாக், ப்ளுடூத் வசதியுடன் கூடிய கைரேகை ஸ்கேனர், டச் ஸ்க்ரீன் ஸ்மார்ட் லீவர் வசதிகளுடன் வெளிவந்துள்ளது. கதவில் பூட்டுக்கு பதில் இந்த  இந்த ஸ்மார்ட் லாக்கை பொருத்தி விடலாம். ஸ்மார்ட்லாக்கை திறக்க உங்கள் கை ரேகை பயன்படுத்தலாம், சாவியும் பயன்படுத்தலாம், ஸ்மார்ட்போனில் டாப் செய்வதன் மூலமும் திறக்கலாம், ஸ்மார்ட்போன் திரையை திறக்க பயன்படும் நம்பர் லாக் வசதியையும் பயன்படுத்தலாம். பேட்டரி மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட் லாக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் பல மாதங்கள் வரை பயன்படுத்தலாம். 

சார்ஜ்-எஸ்டி
பல நாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் சந்திக்கும் மிக பெரிய சிக்கல் ஒவ்வொரு நாட்டிலும் பயன்பாட்டில் இருக்கும் விதவிதமான எலெக்ட்ரிக் பிளக்குகள், இந்த பிளக்குகளில் நம் நாட்டு சார்ஜர் பின் பொருந்தாது, இந்த சிக்கலை தீர்க்க வந்துள்ள கருவி தான் சார்ஜ்-எஸ்டி பலவிதமான பிளக் பின்களை கொண்டுள்ள இந்த சார்ஜ்-எஸ்டி, அதோடு கூட பலவிதமான மின்னணு சாதனங்களுக்கேற்ற சார்ஜர் பின்களையும் கொண்டுள்ளது. 

போன் டிரோன் - இதோஸ்
உயரமான கட்டிடங்கள், மலைபிரதேசங்களை ஏரியல் வியூவில் பறந்து கொண்டே படம் பிடிக்க உதவும் டிரோன், உங்கள் ஸ்மார்ட்போனை இந்த டிரோனில் பொருத்திவிட்டு பறக்க விட்டால்  அழகான இயற்கை காட்சிகளை படமாக்கி நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது போன் டிரோன் - இதோஸ்.  

மூசோ (ஒலி கட்டுபாட்டு கருவி)
அமைதியாக வேலை பார்க்க விடாமல் உங்களை உங்கள் சுற்றுபுறத்தில் இருந்து வரும் சத்தங்கள் தொந்தரவு செய்கிறதா? உங்கள் பிரச்சினையை தீர்க்கும் கண்டுபிடிப்பு தான் மூசோ, நீங்கள் அதிக சப்தம் வரும் இடங்களில் (வீடோ, அலுவலகமோ, வெளியிடங்களோ) இந்த கருவியை பொருத்திவிட்ட்டு சுவிட்சை அழுத்திவிட்டால் போதும், உங்கள் சுற்றியுள்ள ஒலி மற்றும் அதிர்வுகளை இந்த கருவி கவர்ந்து கொள்வதால் உங்களை சுற்றி அமைதி தவழும்.  அமைதியாக இருக்க விரும்புபவர்களுக்கு இந்த கருவி ஒரு வரப்பிரசாதம்.     


இயான் ஸ்கூட்டர்:
இந்த ஸ்கூட்டரை நிறுத்தி வைக்க இடம் தேவையில்லை கைக்கு அடக்கமாக சூட்கேஸ் போல் இந்த ஸ்கூட்டரை மடித்து வைத்து கொள்ளலாம், தேவைபடும்போது ஸ்கூட்டரை பயணத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம். நம் வசதிக்கேற்ப நின்று கொண்டோ அல்லது அமர்ந்து கொண்டோ இந்த ஸ்கூட்டரில் பயணிக்கலாம். 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday 20 December 2017

இந்த மாதத்தின் டாப் 10 ஆன்ட்ராய்ட் (இலவச) ஆப்ஸ்


வ்வொரு நாளும் புதிது புதிதாக ஆன்ட்ராய்ட் ஆப்ஸ்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன, இதுவரை 2.8 மில்லியன் ஆன்ட்ராய்ட் ஆப்கள் வெளிவந்துள்ளன, அவற்றில் இந்த மாதத்தில் மிகவும் பயனுள்ள ஆப்களை அதன் சிறப்பம்சங்கள், பயன்பாடு மற்றும் வெளியிட்ட நாள் போன்றவற்றை கருத்தில் கொண்டு  தொகுக்கபட்டுள்ளது.

1 பேட்டரி மீட்டர் ஓவர்லே - Battery Meter Overlay 
ஸ்மார்ட் போன் பேட்டரி சார்ஜ் இருப்பு சதவிகிதத்தை ஸ்க்ரீனின் மேல் பகுதியில் காண்பிக்கும் இந்த ஆப் சார்ஜ் அளவை வைத்து நாம் எந்தெந்த ஆப்களை (கேம்ஸ் விளையாடுவது, காணொளி பார்ப்பது, இணைய உலவி பார்ப்பது) எப்போது பயன்படுத்தலாம் என்று காண்பிக்கிறது. சார்ஜ் அளவை பொறுத்து நாம் ஸ்க்ரீன் பின்னணியை மாற்றி வைத்து கொள்ளும் வசதியையும் இந்த பேட்டரி மீட்டர் ஓவர்லே ஆப் வழங்குகிறது.  

2  ஃபேன்டம் - Fandom 
இந்த ஆப்பில் உங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு (பிடித்த சினிமா, தொலைக்காட்சி தொடர், நடிகர்கள்...) விஷயங்களின் தலைப்புகளை தேர்ந்தெடுத்து கொள்ளலாம், நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்புகளில் எந்த புதிய செய்தி வந்தாலும் உடனுக்குடன் இந்த ஃபேன்டம் ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

3  ஃபைல்ஸ் கோ (கூகுள் தயாரிப்பு) - Files Go By Google 
கூகுள் நிறுவன தயாரிப்பான ஃபைல்ஸ் கோ நீங்கள் ஸ்மார்ட் போனில் சேமித்து வைத்திருக்கும் அணைத்து கோப்புகளையும் (புகைப்படங்கள், காணொளி காட்சிகள், ஆப்கள்...) ஒரே இடத்தில காணவும் தேவையற்ற கோப்புகளை அழித்து விடவும், நினைவக சேமிப்பை அதிகப்படுத்தவும் உதவுகிறது. இணைய தொடர்பு இல்லாமல் கோப்புகளை நண்பர்களுடன் பகிரவும் ஃபைல்ஸ் கோ ஆப் பயன்படுகிறது. 


4  எக்ஸ் ஹோம் பார் - X Home Bar 
ஸ்மார்ட் போனில் உள்ள ஹோம் பட்டன் சரியாக வேலை பார்க்கவில்லையா? எக்ஸ் ஹோம் பார் ஆப் நிறுவினால் அது ஐ போன் 10ல் உள்ள ஹோம் ஸ்க்ரீன் போன்ற வசதியை அளிக்கிறது,  இடப்புறம் ஸ்வைப் செய்தால் மல்டிடாஸ்கிங் வசதியையும், வலப்புறம் ஸ்வைப் செய்தால் நோட்டிஃபிக்கேஷன் பேனலையும், மேல்நோக்கி ஸ்வைப் செய்தால் ஹோம் ஸ்க்ரீனையும் காணலாம். இந்த ஆப்பை உங்கள் தேவைக்கேற்ப செட்டிங்க்ஸ் பகுதியில் ஸ்வைப்  ஆக்-ஷன்களை மாற்றி கொள்ளலாம்.
-

5  டேட்டாலி (கூகுள் தயாரிப்பு) - Datally By Google 
கூகுள் நிறுவன தயாரிப்பான டேடால்லி, ஒவ்வொரு ஆப்பையும் எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள், எவ்வளவு மொபைல் டேட்டா பயன்டுத்தி இருக்கிறீர்கள் என்று தகவல்களை அளிக்கிறது,  அதோடு கூட வை பை இணைப்பின் போது மட்டும் சில ஆப்களை பயன்படுத்த அனுமதிக்கும் வசதியையும் அளிக்கிறது,  மொபைல் டேட்டா சேமிக்க விரும்புபவர்களுக்கு  டேட்டாலி ஆப் நிச்சயமாக  பயன்படும்.

6  ஸ்மார்ட் வால்பேப்பர் - Smart Wallpaper 
ஸ்மார்ட் போனில் ஒரே வால்பேப்பர் பார்த்து பார்த்து போரடிக்கிறதா ஸ்மார்ட் வால்பேப்பர்  ஆப் நேரத்துக்கு, வாரத்துக்கு, மாதத்துக்கு, மாறும் வானிலைக்கு தகுந்தாற் போல் வால்பேப்பரை மாற்றி கொண்டே இருக்கும், உங்களுக்கு பிடித்தமான வால்பேப்பரை நீங்கள் தரவிறக்கி வைத்து கொண்டால் போதும், இந்த ஆப் உங்களுக்கு விருப்பமான சேமிக்கப்பட்ட வால்பேப்பர்களை நேரத்திற்கு தகுந்தது போல் மாற்றி விடும்.  

7  ஸ்மார்ட் லென்ஸ் - Smart Lens 
ஸ்மார்ட் லென்ஸ் ஆப் கொண்டு பேப்பரில் உள்ள எழுத்துக்களை புகைப்படம் எடுத்து கொள்ளவும், பின் இந்த ஆப் அந்த புகைப்படத்தில் உள்ள எழுத்துக்களை பிடிஎப் கோப்பாக சேமித்து வைத்து கொள்ளலாம், பல மொழிகளில் உள்ள எழுத்துக்களை உங்கள் ஸ்மார்ட்போனில் கோப்புகளாக சேமித்து வைத்துகொள்ள இந்த ஸ்மார்ட் லென்ஸ் ஆப் பயன்படுகிறது. 

8  டிராயர்ஸ் - Drawers 
உங்களுக்கு விருப்பமான ஆப்களை அதன் பயன்பாட்டுக்கு (மெயில்கள் படிக்க, செய்தி வாசிக்க, காணொளி பார்க்க...) ஏற்றவாறு ஒவ்வொரு வகையிலும் ஐந்து ஆப்களை சேமித்து வைத்து கொண்டு அதை எளிதில் ஸ்மார்ட் போனின் வலப்புபுறத்திலிருந்து ஸ்வைப் செய்து  எடுத்து கொள்ளும் வசதியை அளிக்கிறது டிராயர்ஸ் ஆப்.   

9  ரெட்ரோ இணைய உலவி - RetroBrowser 
இந்த ரெட்ரோ இணைய உலவியை கால எந்திரம் என்று கூட சொல்லலாம், ஒரு இணையதளம் கடந்த வருடத்தில் அல்லது கடந்த மாதத்தில் எப்படி காட்சியளித்ததோ அதே போல் காட்டக்கூடிய வசதியை இந்த ரெட்ரோ இணைய உலவி நமக்கு வழங்குகிறது. மற்றபடி எல்லா இணைய உலவிகளிலும் உள்ள வசதிகளும் இந்த ரெட்ரோ இணைய உலவியிலும் கிடைக்கிறது. 

10  ஸ்க்ரிட்டர்  -  Scrittor 
ஸ்க்ரிட்டர், நோட்ஸ்களை வகைபடுத்தி பிரித்து வைத்து தேவைப்படும்போது எளிதாக எடுத்து படிக்க உதவும் ஆப் இது. 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday 13 December 2017

எல்ஜி வி 30 ப்ளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பு நிறுவனமான தென் கொரியாவை சேர்ந்த எல்ஜி நிறுவனத்தின் புதிய வகை  எல்ஜி வி 30 ப்ளஸ் ஸ்மார்ட்போன் நேற்று இந்தியாவில் வெளியிடப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு வெளிவந்த எல்ஜி வி 30 (64 ஜிபி) மாடலுக்கும் இப்போது  வெளிவந்துள்ள எல்ஜி வி 30 ப்ளஸ் (128 ஜிபி) மாடலுக்கும் நினைவக அளவு வேறுபாட்டை தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை.  

6 அங்குல (15.24 செமீ) குவாட் ஹச்.டி+ பி-ஒஎல்இடி தொடுதிரையுடன் (18:9 ஃபுல் விஷன் டிஸ்ப்ளே), 2880*1440 பிக்ஸல்கள் திரை தீர்மானத்துடன்,  அண்ட்ராய்டு v7.1.2 நவ்காட் இயங்குதளத்தில் இயங்கும் எல்ஜி வி 30 பிளஸ், 4 ஜிபி ரேம் உடன் 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன்  835 எஸ்ஒசி  வகை சக்திவாய்ந்த பிராசெசரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இரட்டை கேமரா கொண்டுள்ளது. ஒரு 16 மெகாபிக்சல் கேமராவும், மற்றொரு 13 மெகாபிக்சல் கேமரா 71 டிகிரி அகலக் கோணம் கொண்ட லென்சும் கொண்டுள்ளது. சிறந்த புகைப்படங்கள் எடுக்க மட்டுமல்ல இந்த கேமெராக்கள் (HDR10 வசதி) கொண்டு 4K தரத்தில் வீடியோக்கள் எடுக்கலாம்.  முன்புறத்தில் செல்பி புகைப்படங்கள் எடுக்க வசதியாக 5 மெகாபிக்சல் (90 டிகிரி கோணம் கொண்ட லென்ஸ்) கேமராவை கொண்டுள்ளது. 




மேலும் கை ரேகை சென்சார், லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், அக்ஸிலெரோமீட்டர், பாரோமீட்டர், காம்பஸ், க்யுரோஸ்கோப் ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது. 3300 எம்ஏஹச் பேட்டரி கொண்டு எரியுட்டபடும் எல்ஜி வி 30 பிளஸ் ஸ்மார்ட்போன் அதிவேக மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் கொண்டுள்ளது. 7.3 மிமீ மெல்லிய அளவை கொண்டுள்ள எல்ஜி வி 30 பிளஸ் ஸ்மார்ட்போன் 158 கிராம் எடையைக் கொண்டுள்ளது.

ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ள எல்ஜி வி 30 ப்ளஸ் ஸ்மார்ட்போன் ரூபாய் 44990 -க்கு  அமேசான் வலைதளத்தில் கிடைக்கிறது.   

Thursday 7 December 2017

உலகின் மிக சிறந்த ஏழு உல்லாச பயண வாகனங்கள்




# 1 மெர்சிஸ்-மேபேக் S600 புல்மேன்:
மெர்சிடிஸ்-மேபேக், கண்ணாடி தடுப்புக்கு பின்னால் ஒருவரை ஒருவர் பார்த்து கொள்ளும் வகையில் அமைக்கப்பட்ட இருக்கை வசதி கொண்டுள்ளது, இதே வசதி ஆர்டரின் பேரில் ஒரு மெர்சிடிஸ்-மேபேக் எஸ் 600 புல்மேன் கார்டிலும் உள்ளது. மெர்சிடிஸ்-மேபேக் எஸ் 600 புல்மேன் கார்ட்  VR9 அதிகபட்ச பாதுகாப்பு வசதிகளுடன் பயணிகளுக்கு முழு பாதுகாப்பு அளிக்கிறது மற்றும் டைரக்டரி ERV 2010க்கு இணங்க குண்டுவெடிப்புகளால் சேதமடையாத வாகனமாகவும் சான்றளிக்கபட்டுள்ளது. .


# 2 ரோல்ஸ்-ராய்ஸ் ஃபாண்டம் செரினிட்டி லிமோசின்:
2015 ஆம் ஆண்டில் ரோல்ஸ்-ராய்ஸ் மோட்டார் கார்கள் தயாரிப்பாளர்களால் ஜெனீவா மோட்டார் ஷோவில் ரோல்ஸ்-ராய்ஸ் ஃபாண்டம் செரினிட்டி லிமோசின் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. ஃபோட்டோம் செரிட்டிட்டியின் உட்புறங்கள் ஜப்பானிய வடிவமைப்பால் ஈர்க்கப்பட்டு கையால் நெய்த பட்டு துணியால் அலங்கரிக்கப்பட்டது போல் இருக்கிறது. வெளிப்புறம்  முத்துக்கள் பளிச்சிடுவது போல் பளிரென்று தெரிய மூன்று கட்டமாக முத்து வண்ணபூச்சுகளால் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. ஃபாண்டம் வரிசை II வகையை சேர்ந்த  ஃபாண்டம் செரினிட்டி நேரடியாக எரிபொருள் பெறும் V12 என்ஜின் மற்றும் 8 அதிவேக தானியங்கி கியர்பாக்ஸ் பொருத்தப்பப்பட்டுள்ளது. ஃபாண்டம் செரினிட்டி 1 மில்லியன் பவுண்டுகள் விலையில் கிடைக்கும்.

# 3 பென்ட்லி முல்சானே கிராண்ட் லிமோசின்:
முல்லினர் நிறுவனத்தால் ஒரு தனிப்பட்ட வாடிக்கையாளருக்காக வடிவமைக்கப்பட்ட முல்சானே கிராண்ட் லிமோசின்  நவீன கோச் வகை கார்களுக்கு ஒரு அரிதான உதாரணம். மிக சிறந்த பயண அனுபவத்தை கொடுக்கும் வகையில் அசல் முல்சானே காரின் சக்கர அடித்தளத்துக்கும் மற்றும் உடல்பகுதிக்கும் இடையே 1,000 மில்லிமீட்டர் விரிவுபடுத்தியதுடன், பின்புறத்தில் 79 மி.மீ. விரிவாக்ககூடிய வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது.

# 4 மினி கூப்பர் லிமோசின்:
இயந்திரவியல் உலகின் மிக நீண்ட மினி கூப்பர் வாகனத்தை உருவாக்கியுள்ளது - இது கிட்டத்தட்ட ஒரு இரட்டை அடுக்கு பேருந்தின் நீளத்துக்கு  வரை உள்ளது. 27 அடி நீள ஆறு சக்கர பிரிட்டிஷ் கிளாசிக் வாகனம் ஆரம்பத்தில் ஒரு குறைந்தபட்ச மினி கூப்பர் எஸ் ஆகத்தான் உருவாக்கப்பட்டது.  லாஸ் வேகாஸுக்கு ஏற்ற வகையில் 65,000 பவுண்டுகள் செலவில் மாற்றியமைக்கபட்டு முன்பதிவு செய்யப்பட்டது. இப்போது விற்பனையில் உள்ள லிமோசின்களில் மினி கூப்பர் அதிகமாக விற்பனையாகி வருகிறது.  

# 5 போர்ஷ் பனமேரா லிமோசின்:
இந்த போர்ஸ் பனமேரா லிமோசின் செல்லுமிடமெல்லாம் மக்கள் திரும்பி பார்க்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள V.I.P. லிமோசின் ஆகும். நவீன தொழில்நுட்பத்தின் உச்சமான சக்திவாய்ந்த பார்ஸ்ச் மோட்டார் கொண்டுள்ளது, இதன் அற்புதமான வடிவமைப்பும், பறவை சிறகு விரிப்பது போல் மேலே திறக்க கூடிய அழகிய கதவுகள் மற்றும் நேர்த்தியான நன்கு வடிவமைக்கப்பட்ட உட்புற அலங்கரிப்பும் இந்த பனமேரா லிமோசின் அழகை பலமடங்கு உயர்த்தி உள்ளது. 

# 6 ஹம்மர் H2 லிமோசின்:
ஹம்மர் H2 லிமோ விசேஷமான விழாகாலங்களில் எல்லோரையும் ஈர்க்கக்கூடிய வடிவமைப்பும், வசதிகளும் கொண்டுள்ளது. ஹம்மர் H2 லிமோசின் 16 பயணிகளை அழைத்து செல்லும் வசதி கொண்டுள்ளது, பெரிய விழாக்களுக்கு அது சரியான தேர்வாகும். ஹம்மர் H2 உல்லாச ஊர்தி பிரம்மாண்டமான ஆடம்பரத்தை வெளிப்படுத்துகிறது, ஹம்மர் எச் 2 லிமோசின் ஒரு பெரிய திருமண குழு , கட்சி குழு, விளம்பர நிறுவனங்கள்,  விளையாட்டு வெற்றி நிகழ்வுகள் அல்லது இரவில் குழுவாக வெளியே செல்வதற்கு சிறந்த தேர்வாகும்.

# 7 லம்போர்கினி அவென்டெடார் லிமோசின்:
நட்சத்திரங்களுக்கான கார்களின் பெருமையான வெளியிடு  அவென்டெடார் லிமோசின்.  அவென்டெடார் லிமோசினின் மெல்லிய மற்றும் புகழ்பெற்ற அழகிய வடிவமைப்பும் இணைத்து, நட்சத்திரங்களுக்கான கார்களின் மற்றொரு பரிமாணத்தை வெளிபடுத்துகிறது. புதிய நீட்டிக்கப்பட்ட லம்போர்கினி அவென்டெடார் தயாரிப்பான இது அசல் தயாரிப்பான அவென்டெடார் தயாரிப்பின் பெருமையை நிலைநாட்டும் வகையில் கத்திரிகோல் போல் மேலே திறக்க கூடிய அழகிய கதவுகள் மற்றும் அழகிய வடிவமைப்பினால் காண்பவர்களின் மனதை கொள்ளையடிக்கிறது. 

Wednesday 29 November 2017

பிளாஸ்டிக் பாட்டில் இப்படியும் பயன்படுத்தலாம்


வீட்டில் வீணாக கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களையும் அதன் மூடிகளையும் கொண்டு ஐந்து பயனுள்ள பொருட்களை தயாரிக்கும் முறை கொடுக்கப்பட்டுள்ளது, செய்து பாருங்கள்...  

தூள் உப்பு கொட்டும் மினி பாக்ஸ்:  
இரண்டு சிறிய பிளாஸ்டிக் பாட்டில் மூடிகளை ஒட்டி செய்யும் அழகான உப்பு கொட்டும் மினி பாக்ஸ்.  

சார்ஜரோடு போன் வைக்க ஸ்டாண்ட்:
பிளாஸ்டிக் பாட்டில் அடிபாகத்தை கொண்டு போனை சார்ஜ் போடும்போது போனை சார்ஜரோடு பொருத்தி வைக்க ஸ்டாண்ட்.  

மொபைல் போன் டார்ச் லைட்:
பாட்டில் மூடியின் மேல் பகுதியை வட்டமாக வெட்டி கொண்டு மொபைல் போன் டார்ச் லைட்டில் ஒட்டி ஒளியை சீராக ஒரே இடத்தில் போகஸ் செய்யும் கருவி.  


பிளாஸ்டிக் பாட்டில் மூடி கொண்டு விளையாட்டு பொருள்:
இரண்டு பிளாஸ்டிக் பாட்டில் மூடிகளை நடுவில் துளையிட்டு ஒட்டி ஒரு சிறு ரப்பர் பேண்டு கொண்டு சிறு குச்சிகளை அம்பு போல் எய்ய செய்யும் விளையாட்டு கருவி.

பிளாஸ்டிக் பாட்டில் மூடி கொண்டு ஸ்மார்ட் போனை வைக்க ஸ்டாண்ட்:
பிளாஸ்டிக் பாட்டில் மூடியை கத்தி கொண்டு வெட்டி சிறிய பிளவு ஏற்படுத்தி அதில் ஸ்மார்ட் போனை காணொளி காட்சிகள் பார்க்கும்போது பொருத்தி வைக்க ஸ்டாண்ட்.

Wednesday 22 November 2017

செய்து பாருங்கள்: ஸ்மார்ட்போன் ப்ரொஜெக்டர்

குண்டு பல்பு பயன்படுத்தி ஸ்மார்ட்போன் ப்ரொஜெக்டர் செய்முறை



தேவையான பொருட்கள்:

(ஷூ) காலணி வைக்கும் அட்டைபெட்டி ஒன்று

ஒரு குண்டு பல்பு (மேல்பாகம் திறக்கப்பட்டு உள்ளிருக்கும் பிளமென்ட் நீக்கப்பட்டிருக்க வேண்டும்)

குண்டு பல்பில் நிரப்ப தண்ணீர்

ஸ்மார்ட் போன் அட்டைபெட்டியில் பொருத்த ஒரு சிறு அட்டை மற்றும் செல்லோடேப் (அல்லது) ஸ்மார்ட்போன் பொருத்த தெர்மகோல் அட்டை


முதலாவது குண்டு பல்பு அளவை காலணி அட்டைபெட்டியின் ஒரு பக்கத்தில் வைத்து ஸ்கெட்ச் பென்னில் வரைந்து கொண்டு பின்பு குண்டு பல்பை அட்டைபெட்டியில் பொருத்தும்படி வெட்டி கொள்ளவும்.

வெட்டப்பட்ட அட்டைபெட்டியின் ஒருபுறத்தில் குண்டு பல்பை பொருத்தவும்.

பொருத்தப்பட்ட குண்டு பல்பில் தண்ணீர் ஊற்றி நிரப்பவும்.

சிறு அட்டையில் உங்கள் ஸ்மார்ட்போனை செல்லோடேப் கொண்டு ஒட்டவும்.

ஸ்மார்ட் போனின் ஒளி அளவை அதிகமாக வைத்து விட்டு, ஸ்மார்ட்போன் ஒட்டப்பட்ட அட்டையை ஏற்கெனவே பல்பு பொருத்தபட்டிருக்கும் அட்டைபெட்டியின் உள்ளே எதிர்புறத்தில் வைக்கவும்.

சுவரில் இப்போது ஸ்மார்ட்போன் காட்சி தெரிய துவங்கும், சுவரில் காட்சி தெளிவாக தெரிய ஸ்மார்ட்போன் ஒட்டப்பட்ட அட்டைக்கும் பல்புக்கும் இடையே உள்ள நீளத்தை அதிகமாக்கியும் குறைத்தும் பார்க்கவும். சுவரில் காட்சி தெளிவாக தெரிய தொடங்கிய உடன் அட்டைபெட்டியை மூடிவிடவும்.

குறிப்பு: இதே செய்முறையை குண்டு பல்பு பயன்படுத்துவதற்கு பதில் பூதக்கண்ணாடி பயன்படுத்தியும் செய்யலாம். அட்டைபெட்டியில் குண்டு பல்பு பொருத்துமிடத்தில் பூதக்கண்ணாடியை பொருத்தி விடலாம். மேலும், ஸ்மார்ட்போனை அட்டையில் ஓட்டுவதற்கு பதில் தெர்மகோல் அட்டையில் அளவாக வெட்டி ஸ்மார்ட்போனை பொருத்தியும் பயன்படுத்தலாம்.

பூதக்கண்ணாடி பயன்படுத்தி ஸ்மார்ட்போன் ப்ரொஜெக்டர் செய்முறை

-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday 15 November 2017

கேக் முதல் கேமரா வரை அதிர வைக்கும் ஐந்து கண்டுபிடிப்புகள்

பான்கேக்பாட் (உலகின் முதல் 3டி  பான்கேக்  சுடும் பிரிண்டர்)
தோசையை வட்டமாக சுடுவதே நமக்கு பெரும்பாடாக இருக்கும் நிலையில், விதவிதமான 3டி வடிவங்களில் நாம் தாளில் வரையும் உருவங்கள் நம் கண்களுக்கெதிரே பான் கேக்காக மாறும் அதிசயத்தை நிகழ்த்துகிறது இந்த புதிய கண்டுபிடிப்பான பான்கேக்பாட். முதலில் நாம் விரும்பும் உருவங்களை தாளில் வரைந்து மெமரி கார்டில் சேமித்து வைத்து கொள்ள வேண்டும் பின்பு, 
பான் கேக் மாவை பான்கேக்பாட் இயந்திரத்தில் நிரப்பி விட்டு பிரிண்ட் பொத்தானை அழுத்தினால் நாம் வரைந்த உருவங்களுக்கேற்ப மாவு நீளமான கல்லின் மேல் தானியங்கி அச்சுப்பொறியால் ஊற்றப்படுகிறது. சில நிமிடங்களில் சூடான  பான்கேக் தயார்.


நிக்ஸி (பறக்கும் டிரோன் கேமரா)
நாம் நடக்கும் போது ஒரு கேமரா நம்மை பின் தொடர்ந்து படம் பிடித்து கொண்டே வந்தால் எப்படி இருக்கும், நாம் செய்யும் செயல்களை படம் பிடிக்க கேமராமேன் தேவையில்லை நிக்ஸி   நம்மை தொடர்ந்து பறந்து பறந்து படம் பிடிக்கிறது, பறக்கும் டிரோன் கேமராவான நிக்ஸி.

ஜூடா  பாக்கெட் பிரிண்டர்:
தாளின் மேல் இந்த கையடக்க பிரிண்டரை வைத்துவிட்டால் தாளில் நாம் சேமித்த படங்கள், எழுத்துக்கள் அழகாக அச்சாகி விடுகிறது. மொபைலில் நாம் சேமித்துள்ள கோப்புகளை பிரிண்ட் செய்ய சரியான தேர்வு இந்த ஜூடா  பாக்கெட் பிரிண்டர்.

இல்லூம் ஆர்க்லைட்டர்:
தீப்பெட்டிக்கு மாற்றாக வந்துள்ளது இல்லூம் ஆர்க்லைட்டர், சந்தையில் கிடைக்கும் மற்ற லைட்டர்கள் போல பயன்படுத்தி தூக்கி எறியும் லைட்டர் அல்ல இந்த இல்லூம் ஆர்க்லைட்டர், இந்த லைட்டரில் உள்ள லித்தியம் அயான் பேட்டரியை மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்து லைட்டரை பயன்படுத்தும் வகையில் தயாரித்துள்ளனர். 

சனோ (பறக்கும் டிரோன் கேமரா)
நிக்ஸி டிரோன் கேமராவை போல அதே வகை செயல்பாடுகள் கொண்ட பறக்கும் டிரோன் கேமரா தான் சனோ. ரிமோட் கண்ட்ரோல் மூலம் இந்த பறக்கும் டிரோன் கேமராவை கட்டுபடுத்தி நாம் விரும்பும் புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்கலாம். 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday 8 November 2017

ஷாக் அடிக்காத மின்சாரம் - ஐந்து அரிய கண்டுபிடிப்புகள்

வீடுகளுக்கு தரப்படும் மின் இணைப்பில் தவறுதலாக எப்போதாவது தெரியாமல் நம் கை பட்டு விட்டால் உடல் பதறி சட்டென்று கையை இழுத்து கொண்டிருப்போம், மின்சாரம் பாயும் வயர்களையோ, பொருட்களையோ தெரியாமல் மிதித்து விட்டால் அதிகளவு மின்சாரம் உடலில் பாய்ந்து மனிதர்கள் உடல் கருகி மரித்து போனதையும் நாம் பார்த்திருக்கிறோம். இன்றைய நாகரிக உலகத்தில் மின்சாரத்தை பயன்படுத்தாமல் நாம் வாழ முடியாது. ஒவ்வொரு நாளும் மின்சாரத்தின் தேவை அதிகரித்து கொண்டே செல்கிறது, ஆனால் சில நேரங்களில் மனித தவறுகளால், மின்சாரம் இப்படி உயிர் கொல்லியாக மாறி உயிர்களை காவு வாங்கி விடுகிறது.



இந்த ஷாக் அடித்து நிகழும் மரணங்களை பார்க்கும் போதெல்லாம் எவ்வளவோ முன்னேறி இருக்கும் விஞ்ஞான உலகில் இந்த ஷாக் பிரச்சினைக்கு தீர்வு கண்டுபிடிக்க முடியாதா என்று வேதனை பட்டிருப்போம், நிஜமாகவே தொட்டால் ஷாக் அடிக்காத கரண்ட்டை விஞ்ஞானி திரு. உமா மகேஷ் அவர்கள் கண்டுபிடித்துள்ளார்.  

ஷாக் அடிக்காத கரண்ட்(நானோ ட்ரான்ஸ்பார்மர்) மட்டுமல்ல  ரீசார்ஜ் செய்ய தேவைபடாத நானோ பேட்டரி, நானோ ஏசி, நானோ பிரிஜ், நானோ வாட்டர் கண்டென்சர் (காற்றிலிருந்து தண்ணீர் தயாரிப்பு) என்று முத்தான ஐந்து கண்டுபிடிப்புகள் பற்றியும் அந்த கருவிகளின் செயல்பாடு பற்றியும் விளக்கம் கொடுத்திருக்கிறார் திரு. உமா மகேஷ். நோய்களை இயற்கையான முறையில் தீர்க்கும் ஹீலர் பாஸ்கர் அவர்கள் திரு. உமா மகேஷ் அவர்களோடு உரையாடி இந்த ஐந்து அரிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தும் காணொளி காட்சி:

-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday 1 November 2017

சியோமி மி மிக்ஸ் 2 - அறிமுகம்

சீனாவை சேர்ந்த சியோமி ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் எம்ஐ மிக்ஸ் 2 என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.



எம்ஐ மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 1080*2160 பிக்ஸல்கள் கொண்ட 5.99 இன்ச் முழு ஹெச்டி தொடுதிரையை (ஒரு இஞ்சுக்கு 403 பிக்ஸல்கள்) கொண்டுள்ளது. பெசல்-லெஸ் வகையை சேர்ந்த இந்த ஸ்மார்ட் போன் 6 ஜிபி ரேமும், 128 ஜிபி உள்ளக நினைவகத்தையும் கொண்டுள்ளது. (64 ஜிபி, 128 ஜிபி, 256 ஜிபி உள்ளக நினைவகங்களுடன் உள்ள மாடல்களும் வெளிவந்துள்ளது) 

 ஒரே நேரத்தில் நிறைய ஆப்ஸ்களை பயன்படுத்தும் வகையில் சக்தி வாய்ந்த அக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் பிராசெஸருடன் வெளி வந்துள்ளது. (ஸ்பெஷல் எடிஷனாக வெளிவந்துள்ள செராமிக் எடிசன் மாடல் எம்ஐ மிக்ஸ் 2 ஸ்மார்ட் போனில் மட்டும் 8ஜிபி ரேம் உள்ளது) 

 கேமெராவை பொறுத்தவரை பின்புறத்தில் 12 மெகாபிக்சல் சென்சார் கேமரா கொண்டுள்ளது. இந்த பின்புற கேமெரா 5P லென்ஸ், f/2.0, 4-ஆக்சிஸ் OIS, PDAF மற்றும் HDR வசதிகளை பெற்றுள்ளது. முன்புறத்தில் செல்பி எடுக்க வசதியாக 5 மெகாபிக்சல் கேமெரா கொண்டுள்ளது. 

 இரட்டை சிம் (நானோ சிம்) வசதி கொண்டுள்ள எம்ஐ மிக்ஸ் 2 ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. 3400 எம்ஏஹச் சக்தி கொண்ட பேட்டரி மூலம் இயக்கப்படும் எம்ஐ மிக்ஸ் 2 ஸ்மார்ட் போன் 4G LTE, வை-ஃபை, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி வசதிகளை கொண்டுள்ளது. 

போனில் சென்ஸார்களை பொறுத்தவரை காம்பஸ் மேக்னெடோமீட்டர், ப்ராக்ஸிமிட்டி சென்சார், சுற்றுச்சூழல் ஒளி உணரும் சென்சார், கைரோஸ்கோப் மற்றும் பாரோமீட்டர் கொண்டுள்ளது.

-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday 26 October 2017

அதிர வைக்கும் ஐந்து புதிய கண்டுபிடிப்புகள்

கவாரோபோ - வெளியூர் செல்லும் போது கை வலிக்க சூட்கேஸ்களை சுமந்து கொண்டோ, இழுத்து கொண்டோ செல்ல வேண்டாம். தானாக உங்களை பின் தொடரும் ஸ்மார்ட் சூட்கேஸ்.

ஆக்டோஸ்பாட் - கடலுக்கடியில் நடப்பவற்றை துல்லியமாக படம்பிடிக்க கூடிய கையடக்கமான ஸ்மார்ட் கேமரா.

சிட்டிகோ அர்பன்: - மடித்து வைத்து கொள்ளகூடிய நடைபாதையில் பயணிக்க பயன்படும் ஸ்மார்ட் இ-ஸ்கூட்டர். (நம்ம ஊர் நடைபாதைகளுக்கு இது ஒத்து வராது)

ரெனிகேட்: - அழகிய 3டி கலை வடிவங்களை உருவாக்க கூடிய கையடக்க சாதனம்.

 ஜாம்ஸ்டிக்+: எளிமையாக கிட்டார் வாசிக்க கற்றுகொள்ள பயன்படும் வயர்லெஸ் ஸ்மார்ட் கிட்டார்.

-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday 18 October 2017

மடித்து வைத்துக்கொள்ள கூடிய ஸ்மார்ட்போன்

சீன ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான நிறுவனமான ZTE புதிதாக வெளியிட்டுள்ள ஆக்ஸான் எம் ஸ்மார்ட் போன் இரண்டு திரைகளை கொண்டுள்ளது, ZTE Axon M ஸ்மார்ட்போன் அக்டோபர் 2017 ல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1920 * 1080 பிக்சல்கள் கொண்ட 5.20 அங்குல தொடுதிரையுடன் வருகிறது. 

 4GB ரேம், 64GB இன்டெர்னல் மெமரி கொண்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் 2.15GHz திறன் கொண்ட குவாட் கோர் ஸ்னாப் டிராகன் 821 செயலி மூலம் இயக்கப்படுகிறது, இந்த ஸ்மார்ட் போன் பின்புறத்தில் 20 மெகாபிக்சல் முதன்மை கேமராவை கொண்டுள்ளது. 

 ZTE Axon எம் ஆண்ட்ராய்டு 7.1.2 இயங்குதளம் இயங்குகிறது பேட்டரியை பொறுத்தவரை ஒரு 3180mAh நீக்க இயலாத பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. ZTE AXON M ஆனது ஒரு சிம் (நானோ சிம் - ஜிஎஸ்எம்) ஸ்மார்ட்போன் ஆகும், Wi-Fi, GPS, ப்ளூடூத், FM வசதிகளை கொண்டுள்ளது.

-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Sunday 8 October 2017

நவீன மாற்றங்கள்

வருங்காலத்தில் போக்குவரத்து துறையில் வர போகும் நவீன மாற்றங்கள்

-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Saturday 7 October 2017

இந்த மாதத்தின் சிறந்த 8 ஸ்மார்ட் போன்கள்

பதினைந்தையிரம் விலைக்குள் கிடைக்கும் சிறந்த 8 ஸ்மார்ட் போன்கள் (சிறந்த கேமரா & கேமிங் வசதிகளுடன்)