Thursday 28 December 2017

2017ஆம் ஆண்டின் சிறந்த ஐந்து கண்டுபிடிப்புகள்




அல்ட்ரா லாக் ஸ்மார்ட் லாக்
வீடு, அலுவலக கதவுகள் பூட்டு போட்டு பூட்டிய பின் சாவியை எங்காவது மறந்து வைத்து விட்டால் பிறகு எங்கு வைத்தோம் என்று தேடுவதிலேயே நேரம் வீணாகும், வைத்த இடம் நினைவுக்கு வராமல், மாற்று சாவியும் பூட்டிய வீட்டுக்குள்  வைத்திருந்தால் அவ்வளவுதான் அன்றோடு அந்த பூட்டின் ஆயுள் முடிந்து விடும்,  இந்த பூட்டு சாவி பிரச்சினைக்கு முடிவு கட்டும் கண்டுபிடிப்பு தான் அல்ட்ரா லாக் ஸ்மார்ட் லாக், ப்ளுடூத் வசதியுடன் கூடிய கைரேகை ஸ்கேனர், டச் ஸ்க்ரீன் ஸ்மார்ட் லீவர் வசதிகளுடன் வெளிவந்துள்ளது. கதவில் பூட்டுக்கு பதில் இந்த  இந்த ஸ்மார்ட் லாக்கை பொருத்தி விடலாம். ஸ்மார்ட்லாக்கை திறக்க உங்கள் கை ரேகை பயன்படுத்தலாம், சாவியும் பயன்படுத்தலாம், ஸ்மார்ட்போனில் டாப் செய்வதன் மூலமும் திறக்கலாம், ஸ்மார்ட்போன் திரையை திறக்க பயன்படும் நம்பர் லாக் வசதியையும் பயன்படுத்தலாம். பேட்டரி மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட் லாக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் பல மாதங்கள் வரை பயன்படுத்தலாம். 

சார்ஜ்-எஸ்டி
பல நாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் சந்திக்கும் மிக பெரிய சிக்கல் ஒவ்வொரு நாட்டிலும் பயன்பாட்டில் இருக்கும் விதவிதமான எலெக்ட்ரிக் பிளக்குகள், இந்த பிளக்குகளில் நம் நாட்டு சார்ஜர் பின் பொருந்தாது, இந்த சிக்கலை தீர்க்க வந்துள்ள கருவி தான் சார்ஜ்-எஸ்டி பலவிதமான பிளக் பின்களை கொண்டுள்ள இந்த சார்ஜ்-எஸ்டி, அதோடு கூட பலவிதமான மின்னணு சாதனங்களுக்கேற்ற சார்ஜர் பின்களையும் கொண்டுள்ளது. 

போன் டிரோன் - இதோஸ்
உயரமான கட்டிடங்கள், மலைபிரதேசங்களை ஏரியல் வியூவில் பறந்து கொண்டே படம் பிடிக்க உதவும் டிரோன், உங்கள் ஸ்மார்ட்போனை இந்த டிரோனில் பொருத்திவிட்டு பறக்க விட்டால்  அழகான இயற்கை காட்சிகளை படமாக்கி நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது போன் டிரோன் - இதோஸ்.  

மூசோ (ஒலி கட்டுபாட்டு கருவி)
அமைதியாக வேலை பார்க்க விடாமல் உங்களை உங்கள் சுற்றுபுறத்தில் இருந்து வரும் சத்தங்கள் தொந்தரவு செய்கிறதா? உங்கள் பிரச்சினையை தீர்க்கும் கண்டுபிடிப்பு தான் மூசோ, நீங்கள் அதிக சப்தம் வரும் இடங்களில் (வீடோ, அலுவலகமோ, வெளியிடங்களோ) இந்த கருவியை பொருத்திவிட்ட்டு சுவிட்சை அழுத்திவிட்டால் போதும், உங்கள் சுற்றியுள்ள ஒலி மற்றும் அதிர்வுகளை இந்த கருவி கவர்ந்து கொள்வதால் உங்களை சுற்றி அமைதி தவழும்.  அமைதியாக இருக்க விரும்புபவர்களுக்கு இந்த கருவி ஒரு வரப்பிரசாதம்.     


இயான் ஸ்கூட்டர்:
இந்த ஸ்கூட்டரை நிறுத்தி வைக்க இடம் தேவையில்லை கைக்கு அடக்கமாக சூட்கேஸ் போல் இந்த ஸ்கூட்டரை மடித்து வைத்து கொள்ளலாம், தேவைபடும்போது ஸ்கூட்டரை பயணத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம். நம் வசதிக்கேற்ப நின்று கொண்டோ அல்லது அமர்ந்து கொண்டோ இந்த ஸ்கூட்டரில் பயணிக்கலாம். 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்