சீனாவை சேர்ந்த சியோமி ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் எம்ஐ மிக்ஸ் 2 என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.
எம்ஐ மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 1080*2160
பிக்ஸல்கள் கொண்ட 5.99 இன்ச் முழு ஹெச்டி தொடுதிரையை (ஒரு இஞ்சுக்கு 403 பிக்ஸல்கள்) கொண்டுள்ளது.
பெசல்-லெஸ் வகையை சேர்ந்த இந்த ஸ்மார்ட் போன் 6 ஜிபி ரேமும், 128 ஜிபி உள்ளக நினைவகத்தையும் கொண்டுள்ளது. (64 ஜிபி, 128 ஜிபி, 256 ஜிபி உள்ளக நினைவகங்களுடன் உள்ள மாடல்களும் வெளிவந்துள்ளது)
ஒரே நேரத்தில் நிறைய ஆப்ஸ்களை பயன்படுத்தும் வகையில் சக்தி வாய்ந்த அக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் பிராசெஸருடன் வெளி வந்துள்ளது. (ஸ்பெஷல் எடிஷனாக வெளிவந்துள்ள செராமிக் எடிசன் மாடல் எம்ஐ மிக்ஸ் 2 ஸ்மார்ட் போனில் மட்டும் 8ஜிபி ரேம் உள்ளது)
கேமெராவை பொறுத்தவரை பின்புறத்தில் 12 மெகாபிக்சல் சென்சார் கேமரா கொண்டுள்ளது. இந்த பின்புற கேமெரா 5P லென்ஸ், f/2.0, 4-ஆக்சிஸ் OIS, PDAF மற்றும் HDR வசதிகளை
பெற்றுள்ளது. முன்புறத்தில் செல்பி எடுக்க வசதியாக 5 மெகாபிக்சல் கேமெரா கொண்டுள்ளது.
இரட்டை சிம் (நானோ சிம்) வசதி கொண்டுள்ள எம்ஐ மிக்ஸ் 2 ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. 3400 எம்ஏஹச் சக்தி கொண்ட பேட்டரி மூலம் இயக்கப்படும் எம்ஐ மிக்ஸ் 2
ஸ்மார்ட் போன் 4G LTE, வை-ஃபை, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி வசதிகளை கொண்டுள்ளது.
போனில் சென்ஸார்களை பொறுத்தவரை காம்பஸ் மேக்னெடோமீட்டர், ப்ராக்ஸிமிட்டி சென்சார், சுற்றுச்சூழல் ஒளி உணரும் சென்சார், கைரோஸ்கோப் மற்றும் பாரோமீட்டர் கொண்டுள்ளது.