Wednesday 15 November 2017

கேக் முதல் கேமரா வரை அதிர வைக்கும் ஐந்து கண்டுபிடிப்புகள்

பான்கேக்பாட் (உலகின் முதல் 3டி  பான்கேக்  சுடும் பிரிண்டர்)
தோசையை வட்டமாக சுடுவதே நமக்கு பெரும்பாடாக இருக்கும் நிலையில், விதவிதமான 3டி வடிவங்களில் நாம் தாளில் வரையும் உருவங்கள் நம் கண்களுக்கெதிரே பான் கேக்காக மாறும் அதிசயத்தை நிகழ்த்துகிறது இந்த புதிய கண்டுபிடிப்பான பான்கேக்பாட். முதலில் நாம் விரும்பும் உருவங்களை தாளில் வரைந்து மெமரி கார்டில் சேமித்து வைத்து கொள்ள வேண்டும் பின்பு, 
பான் கேக் மாவை பான்கேக்பாட் இயந்திரத்தில் நிரப்பி விட்டு பிரிண்ட் பொத்தானை அழுத்தினால் நாம் வரைந்த உருவங்களுக்கேற்ப மாவு நீளமான கல்லின் மேல் தானியங்கி அச்சுப்பொறியால் ஊற்றப்படுகிறது. சில நிமிடங்களில் சூடான  பான்கேக் தயார்.


நிக்ஸி (பறக்கும் டிரோன் கேமரா)
நாம் நடக்கும் போது ஒரு கேமரா நம்மை பின் தொடர்ந்து படம் பிடித்து கொண்டே வந்தால் எப்படி இருக்கும், நாம் செய்யும் செயல்களை படம் பிடிக்க கேமராமேன் தேவையில்லை நிக்ஸி   நம்மை தொடர்ந்து பறந்து பறந்து படம் பிடிக்கிறது, பறக்கும் டிரோன் கேமராவான நிக்ஸி.

ஜூடா  பாக்கெட் பிரிண்டர்:
தாளின் மேல் இந்த கையடக்க பிரிண்டரை வைத்துவிட்டால் தாளில் நாம் சேமித்த படங்கள், எழுத்துக்கள் அழகாக அச்சாகி விடுகிறது. மொபைலில் நாம் சேமித்துள்ள கோப்புகளை பிரிண்ட் செய்ய சரியான தேர்வு இந்த ஜூடா  பாக்கெட் பிரிண்டர்.

இல்லூம் ஆர்க்லைட்டர்:
தீப்பெட்டிக்கு மாற்றாக வந்துள்ளது இல்லூம் ஆர்க்லைட்டர், சந்தையில் கிடைக்கும் மற்ற லைட்டர்கள் போல பயன்படுத்தி தூக்கி எறியும் லைட்டர் அல்ல இந்த இல்லூம் ஆர்க்லைட்டர், இந்த லைட்டரில் உள்ள லித்தியம் அயான் பேட்டரியை மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்து லைட்டரை பயன்படுத்தும் வகையில் தயாரித்துள்ளனர். 

சனோ (பறக்கும் டிரோன் கேமரா)
நிக்ஸி டிரோன் கேமராவை போல அதே வகை செயல்பாடுகள் கொண்ட பறக்கும் டிரோன் கேமரா தான் சனோ. ரிமோட் கண்ட்ரோல் மூலம் இந்த பறக்கும் டிரோன் கேமராவை கட்டுபடுத்தி நாம் விரும்பும் புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்கலாம். 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்