Thursday 4 January 2018

ஃபேஷன் விரும்பிகள் நம்பி வாங்கும் - எகோ லுக் கேமரா



மேசான் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் எகோ லுக்  என்ற புதிய வகை கேமராவை அறிமுகபடுத்தியுள்ளது. ஃபேஷன் விரும்பிகளுக்கு இந்த எகோ லுக் கேமரா மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்த கேமராவை இயக்க நீங்கள் உங்கள் கைகளை பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை, இந்த கேமரா முன் நின்று கொண்டு உங்கள் குரல் மூலம் நீங்கள் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க இந்த கேமராவுக்கு கட்டளை கொடுத்தால் போதும் அலெக்சா என்ற மேக கணினி சார்ந்த குரல் சேவையுடன் இணைக்கபட்டிருக்கும் எகோ லுக் கேமரா நீங்கள் விரும்பும் விதத்தில் புகைபடங்கள் அல்லது வீடியோக்களை எடுத்து தருகிறது. 



புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதோடு எகோ லுக் கேமராவின் வேலை முடிந்து விடுவதில்லை, உங்கல் ஸ்மார்ட் போனுடன் நேரம், மாறும் வானிலை மற்றும் செல்லுமிடம் (ஷாப்பிங், பார்ட்டி, கலை நிகழ்ச்சி, அலுவலகம், பூங்கா, கடற்கரை, விருந்து விசேஷ நிகழ்ச்சிகள்)  இவற்றுக்கு ஏற்ப தகுந்த ஆடைகளை தேர்வு செய்வதிலும்  உங்களுக்கு உதவுகிறது. உதாரணத்திற்கு கடற்கரைக்கு செல்வதற்கு முன் நீங்கள் வீட்டுக்குள் எடுத்துள்ள புகைப்படங்களை கொண்டு, அந்த புகைப்படங்களின் பின்னணியில்    கடற்கரை    காட்சிகளை    வைத்து     நீங்கள்     அணிந்துள்ள உடைகளில் எந்த புகைப்படத்தில் உள்ள உடை உங்களுக்கு கடற்கரையில் எவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்று சொல்கிறது, இப்படி பல்வேறு உடைகளில் நீங்கள் புகைப்படம் எடுத்து வைத்து கொண்டால் அந்த புகைப்படங்களில் உங்கள் பின்னணியில் உள்ள காட்சியை மாற்றி எந்தெந்த இடங்களுக்கு எந்த உடை அணிந்து செல்வது பொருத்தமாக இருக்கும் என்று ஸ்டைல் செக் என்ற ஸ்மார்ட் போன் சேவை மூலம் உங்களுக்கு தெரிவிக்கிறது, மேலும் உங்கள் புகைப்படங்கள், காணொளி காட்சிகளை சமூக ஊடகங்கள்  மூலம் உடனுக்குடன் உங்கள் நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து கொள்ளும் வசதியையும் அளிக்கிறது. 



இந்த எகோ லுக் கேமராவில், வீட்டிற்குள்ளேயே புகைப்பட ஸ்டுடியோ போன்று ஒளி வெள்ளம் தரும் எல் இ டி ப்ளாஷ் விளக்குகள், ஒரு சிறிய 1.6 வாட் திறன் கொண்ட ஸ்பீக்கர் - குரல் சேவைகள் அளிக்க, பாடல்கள் கேட்க, குரல் மூலம் இயங்கும் ஸ்மார்ட் வீட்டு உபயோக பொருட்களின் - ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் ஏ.சி,   இயக்கத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. 

ஒரு தேர்ந்த ஃபேஷன் நிபுணரை போன்று செயல்படும் இந்த எகோ லுக் கேமராவை கொண்டு,  புதிய உடைகளை வாங்குவதற்கு முன்,  அந்த உடையை ஒரு முறை அணிந்து புகைப்படம் எடுத்து  பார்த்தால் அந்த உடை உங்களுக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்று தெரிந்து விடும், பின்பு அந்த உடையை வாங்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்யலாம். சரியான உடைகளையும் தேர்வு செய்ய முடியும், அனாவசிய செலவையும் கட்டுபடுத்தலாம்.
-----------------------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------------------------
அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்க 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்