Wednesday 20 December 2017

இந்த மாதத்தின் டாப் 10 ஆன்ட்ராய்ட் (இலவச) ஆப்ஸ்


வ்வொரு நாளும் புதிது புதிதாக ஆன்ட்ராய்ட் ஆப்ஸ்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன, இதுவரை 2.8 மில்லியன் ஆன்ட்ராய்ட் ஆப்கள் வெளிவந்துள்ளன, அவற்றில் இந்த மாதத்தில் மிகவும் பயனுள்ள ஆப்களை அதன் சிறப்பம்சங்கள், பயன்பாடு மற்றும் வெளியிட்ட நாள் போன்றவற்றை கருத்தில் கொண்டு  தொகுக்கபட்டுள்ளது.

1 பேட்டரி மீட்டர் ஓவர்லே - Battery Meter Overlay 
ஸ்மார்ட் போன் பேட்டரி சார்ஜ் இருப்பு சதவிகிதத்தை ஸ்க்ரீனின் மேல் பகுதியில் காண்பிக்கும் இந்த ஆப் சார்ஜ் அளவை வைத்து நாம் எந்தெந்த ஆப்களை (கேம்ஸ் விளையாடுவது, காணொளி பார்ப்பது, இணைய உலவி பார்ப்பது) எப்போது பயன்படுத்தலாம் என்று காண்பிக்கிறது. சார்ஜ் அளவை பொறுத்து நாம் ஸ்க்ரீன் பின்னணியை மாற்றி வைத்து கொள்ளும் வசதியையும் இந்த பேட்டரி மீட்டர் ஓவர்லே ஆப் வழங்குகிறது.  

2  ஃபேன்டம் - Fandom 
இந்த ஆப்பில் உங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு (பிடித்த சினிமா, தொலைக்காட்சி தொடர், நடிகர்கள்...) விஷயங்களின் தலைப்புகளை தேர்ந்தெடுத்து கொள்ளலாம், நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்புகளில் எந்த புதிய செய்தி வந்தாலும் உடனுக்குடன் இந்த ஃபேன்டம் ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

3  ஃபைல்ஸ் கோ (கூகுள் தயாரிப்பு) - Files Go By Google 
கூகுள் நிறுவன தயாரிப்பான ஃபைல்ஸ் கோ நீங்கள் ஸ்மார்ட் போனில் சேமித்து வைத்திருக்கும் அணைத்து கோப்புகளையும் (புகைப்படங்கள், காணொளி காட்சிகள், ஆப்கள்...) ஒரே இடத்தில காணவும் தேவையற்ற கோப்புகளை அழித்து விடவும், நினைவக சேமிப்பை அதிகப்படுத்தவும் உதவுகிறது. இணைய தொடர்பு இல்லாமல் கோப்புகளை நண்பர்களுடன் பகிரவும் ஃபைல்ஸ் கோ ஆப் பயன்படுகிறது. 


4  எக்ஸ் ஹோம் பார் - X Home Bar 
ஸ்மார்ட் போனில் உள்ள ஹோம் பட்டன் சரியாக வேலை பார்க்கவில்லையா? எக்ஸ் ஹோம் பார் ஆப் நிறுவினால் அது ஐ போன் 10ல் உள்ள ஹோம் ஸ்க்ரீன் போன்ற வசதியை அளிக்கிறது,  இடப்புறம் ஸ்வைப் செய்தால் மல்டிடாஸ்கிங் வசதியையும், வலப்புறம் ஸ்வைப் செய்தால் நோட்டிஃபிக்கேஷன் பேனலையும், மேல்நோக்கி ஸ்வைப் செய்தால் ஹோம் ஸ்க்ரீனையும் காணலாம். இந்த ஆப்பை உங்கள் தேவைக்கேற்ப செட்டிங்க்ஸ் பகுதியில் ஸ்வைப்  ஆக்-ஷன்களை மாற்றி கொள்ளலாம்.
-

5  டேட்டாலி (கூகுள் தயாரிப்பு) - Datally By Google 
கூகுள் நிறுவன தயாரிப்பான டேடால்லி, ஒவ்வொரு ஆப்பையும் எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள், எவ்வளவு மொபைல் டேட்டா பயன்டுத்தி இருக்கிறீர்கள் என்று தகவல்களை அளிக்கிறது,  அதோடு கூட வை பை இணைப்பின் போது மட்டும் சில ஆப்களை பயன்படுத்த அனுமதிக்கும் வசதியையும் அளிக்கிறது,  மொபைல் டேட்டா சேமிக்க விரும்புபவர்களுக்கு  டேட்டாலி ஆப் நிச்சயமாக  பயன்படும்.

6  ஸ்மார்ட் வால்பேப்பர் - Smart Wallpaper 
ஸ்மார்ட் போனில் ஒரே வால்பேப்பர் பார்த்து பார்த்து போரடிக்கிறதா ஸ்மார்ட் வால்பேப்பர்  ஆப் நேரத்துக்கு, வாரத்துக்கு, மாதத்துக்கு, மாறும் வானிலைக்கு தகுந்தாற் போல் வால்பேப்பரை மாற்றி கொண்டே இருக்கும், உங்களுக்கு பிடித்தமான வால்பேப்பரை நீங்கள் தரவிறக்கி வைத்து கொண்டால் போதும், இந்த ஆப் உங்களுக்கு விருப்பமான சேமிக்கப்பட்ட வால்பேப்பர்களை நேரத்திற்கு தகுந்தது போல் மாற்றி விடும்.  

7  ஸ்மார்ட் லென்ஸ் - Smart Lens 
ஸ்மார்ட் லென்ஸ் ஆப் கொண்டு பேப்பரில் உள்ள எழுத்துக்களை புகைப்படம் எடுத்து கொள்ளவும், பின் இந்த ஆப் அந்த புகைப்படத்தில் உள்ள எழுத்துக்களை பிடிஎப் கோப்பாக சேமித்து வைத்து கொள்ளலாம், பல மொழிகளில் உள்ள எழுத்துக்களை உங்கள் ஸ்மார்ட்போனில் கோப்புகளாக சேமித்து வைத்துகொள்ள இந்த ஸ்மார்ட் லென்ஸ் ஆப் பயன்படுகிறது. 

8  டிராயர்ஸ் - Drawers 
உங்களுக்கு விருப்பமான ஆப்களை அதன் பயன்பாட்டுக்கு (மெயில்கள் படிக்க, செய்தி வாசிக்க, காணொளி பார்க்க...) ஏற்றவாறு ஒவ்வொரு வகையிலும் ஐந்து ஆப்களை சேமித்து வைத்து கொண்டு அதை எளிதில் ஸ்மார்ட் போனின் வலப்புபுறத்திலிருந்து ஸ்வைப் செய்து  எடுத்து கொள்ளும் வசதியை அளிக்கிறது டிராயர்ஸ் ஆப்.   

9  ரெட்ரோ இணைய உலவி - RetroBrowser 
இந்த ரெட்ரோ இணைய உலவியை கால எந்திரம் என்று கூட சொல்லலாம், ஒரு இணையதளம் கடந்த வருடத்தில் அல்லது கடந்த மாதத்தில் எப்படி காட்சியளித்ததோ அதே போல் காட்டக்கூடிய வசதியை இந்த ரெட்ரோ இணைய உலவி நமக்கு வழங்குகிறது. மற்றபடி எல்லா இணைய உலவிகளிலும் உள்ள வசதிகளும் இந்த ரெட்ரோ இணைய உலவியிலும் கிடைக்கிறது. 

10  ஸ்க்ரிட்டர்  -  Scrittor 
ஸ்க்ரிட்டர், நோட்ஸ்களை வகைபடுத்தி பிரித்து வைத்து தேவைப்படும்போது எளிதாக எடுத்து படிக்க உதவும் ஆப் இது. 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்