தேவையான பொருட்கள்:
(ஷூ) காலணி வைக்கும் அட்டைபெட்டி ஒன்று
ஒரு குண்டு பல்பு (மேல்பாகம் திறக்கப்பட்டு உள்ளிருக்கும் பிளமென்ட் நீக்கப்பட்டிருக்க வேண்டும்)
குண்டு பல்பில் நிரப்ப தண்ணீர்
ஸ்மார்ட் போன் அட்டைபெட்டியில் பொருத்த ஒரு சிறு அட்டை மற்றும் செல்லோடேப் (அல்லது) ஸ்மார்ட்போன் பொருத்த தெர்மகோல் அட்டை
முதலாவது குண்டு பல்பு அளவை காலணி அட்டைபெட்டியின் ஒரு பக்கத்தில் வைத்து ஸ்கெட்ச் பென்னில் வரைந்து கொண்டு பின்பு குண்டு பல்பை அட்டைபெட்டியில் பொருத்தும்படி வெட்டி கொள்ளவும்.
வெட்டப்பட்ட அட்டைபெட்டியின் ஒருபுறத்தில் குண்டு பல்பை பொருத்தவும்.
பொருத்தப்பட்ட குண்டு பல்பில் தண்ணீர் ஊற்றி நிரப்பவும்.
சிறு அட்டையில் உங்கள் ஸ்மார்ட்போனை செல்லோடேப் கொண்டு ஒட்டவும்.
ஸ்மார்ட் போனின் ஒளி அளவை அதிகமாக வைத்து விட்டு, ஸ்மார்ட்போன் ஒட்டப்பட்ட அட்டையை ஏற்கெனவே பல்பு பொருத்தபட்டிருக்கும் அட்டைபெட்டியின் உள்ளே எதிர்புறத்தில் வைக்கவும்.
சுவரில் இப்போது ஸ்மார்ட்போன் காட்சி தெரிய துவங்கும், சுவரில் காட்சி தெளிவாக தெரிய ஸ்மார்ட்போன் ஒட்டப்பட்ட அட்டைக்கும் பல்புக்கும் இடையே உள்ள நீளத்தை அதிகமாக்கியும் குறைத்தும் பார்க்கவும். சுவரில் காட்சி தெளிவாக தெரிய தொடங்கிய உடன் அட்டைபெட்டியை மூடிவிடவும்.
குறிப்பு: இதே செய்முறையை குண்டு பல்பு பயன்படுத்துவதற்கு பதில் பூதக்கண்ணாடி பயன்படுத்தியும் செய்யலாம். அட்டைபெட்டியில் குண்டு பல்பு பொருத்துமிடத்தில் பூதக்கண்ணாடியை பொருத்தி விடலாம். மேலும், ஸ்மார்ட்போனை அட்டையில் ஓட்டுவதற்கு பதில் தெர்மகோல் அட்டையில் அளவாக வெட்டி ஸ்மார்ட்போனை பொருத்தியும் பயன்படுத்தலாம்.
பூதக்கண்ணாடி பயன்படுத்தி ஸ்மார்ட்போன் ப்ரொஜெக்டர் செய்முறை