Sunday 3 November 2019

வருகிறது சியோமி மி நோட் 10


சீனாவின் பெய்ஜிங் நகரில் மி சி சி 9 புரோ  நவம்பர் 5ஆம் தேதி வெளியிடப்படும்  என்று  அதிகாரப்பூர்வமாக மி நிறுவனம் அறிவி்த்துள்ளது, சீனா தவிர்த்து உலகம் முழுவதும் இந்த மி சிசி 9 பிரோ, மி நோட் 10  என்ற பெயரில் வெளியிடப்படும் என்று தெரிகிறது. இதனை தொடர்ந்து நவம்பர் 6 ஆம் தேதி  ஸ்பெயினிலுள்ள மேட்ரிட் நகரில்  மி நோட் 10 வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் மி நோட் 10 வெளியிடப்படுமா என்று தெரிவிக்கப்படவில்லை. 

இந்த போன் குறித்து இதுவரை வெளிவந்துள்ள அதிகாரப்பூர்வமற்ற தகவல்களின் படி,  மி சிசி 9  (அ)  மி நோட் 10 (உலகளவில்) குவால்காம் ஸ்னாப்டிராகன் 730 ஜி செயலி மூலம் இயக்கப்படும் என்று தெரிகிறது. இந்த சிப்செட்டை சியோமி தனது ஸ்மார்ட்போனில் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும். முன்னதாக ரெட்மி கே 20 ஸ்னாப்டிராகன் 730 உடன் வந்தது. ஒட்டுமொத்தமாக ஸ்னாப்டிராகன் 730 ஒரு சக்திவாய்ந்த செயலி மற்றும் எந்தவிதமான தடங்கலும் இல்லாமல் அன்றாட பணிகளை நன்றாக கையாளும் திறன் கொண்டது. ஸ்னாப்டிராகன் 730 ஜி ஒரு சக்திவாய்ந்த செயல்திறனை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மி நோட் 10 பின்புறத்தில் ஐந்து கேமராக்களை கொண்டுள்ளது. பிரதான கேமரா 108 மெகா பிக்சல் கொண்டது, 12 எம்.பி போர்ட்ரெய்ட் லென்ஸ், 50 எக்ஸ் டிஜிட்டல் ஜூம், 10 எக்ஸ் ஆப்ஷனல் ஜூம், சூப்பர் மேக்ரோ மோட் மற்றும் பிற கேமரா அம்சங்களை கொண்டுள்ளது. முன்பக்கத்தில், மி சிசி 9, 32 எம்பி செல்பி ஷூட்டருடன் வருவதாகக் கூறப்படுகிறது. தொலைபேசி டாட் டிராப் நாட்ச் ஸ்கிரீனுடன் வரும். ஸ்மார்ட்போனின் டிஸ்ப்ளேயில் கைரேகை சென்சார் இருக்கும் என்று கூறப்படுகிறது.

அறிமுகத்திற்கு முன்னதாக, சியோமி மி சி சி9 புரோ (அ) மி நோட் 10 பற்றிய பல விவரங்களை உறுதிப்படுத்தியுள்ளது. இந்த ஸ்மார்ட்போன் 5260mAh பேட்டரியுடன் 30W வேகமான சார்ஜிங் ஆதரவுடன் வரும் என்று கூறப்படுகிறது. இதில் யூ.எஸ்.பி டைப் சி ஆதரவு இருக்கும். மென்பொருள் முன்னணியில், மி சிசி 9 புரோ ஆன்ட்ராய்டு 9 பை அடிப்படையில் எம்ஐயுஐ 10 இல் இயங்கும். அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் தொலைபேசி  எம்ஐயுஐ 11 மற்றும் ஆன்ட்ராய்டு 10க்கு மேம்படுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட்போன் வெள்ளை, பச்சை மற்றும் கருப்பு ஆகிய மூன்று வண்ணங்களில் வரும் என்பதையும் சியோமி உறுதிப்படுத்தியுள்ளது.

கொசுறு தகவல்: இந்தியாவில் எப்போது வெளிவரும் என்று தெரியாத போது ஏன் இந்த பதிவு என்று கேட்பவர்களுக்கு எப்படியும் இந்தியாவில் நிச்சயமாக விற்பனைக்கு வரும் ஆனால், சில நாட்களுக்கு முன்பு தான் நோட் 8 ப்ரோ வெளியிடப்பட்டுள்ளதால் சிறிது தாமதமாக வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Wednesday 7 August 2019

இட பற்றாக்குறையை போக்கும் பாக்கெட் அலமாரி


சிறிய வீடுகளில் வசிக்கும் மக்கள் ஆசையாக சில வீட்டு உபயோக சாதனங்களையும், பொருட்களையும் வாங்கினாலும் அதை வீட்டில் வைக்க இடமில்லாமல் இடப்பற்றாகுறையால் திணறுவது பல வீடுகளில் வழக்கமாக உள்ளது, வீட்டில் புதிதாக ஒரு பொருள் வாங்க வேண்டுமென்றால் ஏற்கனவே வீட்டில் இருக்கும் பழைய பொருட்களில் எதாவது ஒன்றை வெளியே தள்ளிய பின்பு தான் புதிய பொருளை வீட்டிற்குள் எடுத்து வர முடியும் என்கிற அளவுக்கு இடப்பற்றாகுறை உள்ள வீடுகளும் உண்டு.

(காணொளி காட்சி பார்க்க கீழேயுள்ள பிளே பட்டனை தட்டவும்)இப்படி சிறிய வீடுகளில் வசிப்பவர்களின் இடப்பற்றாகுறை பிரச்சினையை போக்கும் விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளது ஒரு பாக்கெட் அலமாரி, அலமாரி என்றால் துணிமணி வைக்கும் அலமாரி மட்டுமில்லை. இரண்டு பகுதிகளாக பிரியும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பாக்கெட் அலமாரியில் வார்ட்ரோப்கள், வீட்டு உபயோக சாதனங்களை  (பெரிய திரை உள்ள டிவி உட்பட)  வைக்க ஷெல்ஃப்கள், தேவைப்படும்போது திறந்து பயன்படுத்தக்கூடிய மேஜை, (வேலை முடிந்தவுடன் மடித்து வைத்திடலாம்) என்று பல வசதிகள் உள்ளது. இந்த பாக்கெட் அலமாரியில் பொருத்தப்பட்டுள்ள ஒரு சிறிய சதுர வடிவ சாதனத்தில் இருக்கும் பொத்தான்களை அழுத்தி நம் தேவைக்கேற்ப இந்த அலமாரியை இரண்டு பாகங்களாக திறந்தும்,  மூடியும் பயன்படுத்தி கொள்ளலாம். ஸ்மார்ட்போன் ஆப் கொண்டும் ரிமோட் பயன்படுத்துவது போல இந்த பாக்கெட் அலமாரியை இயக்க முடியும், கூகுள் ஹோம் அல்லது அமேசான் அலெக்ஸா சாதனங்களின் குரல் கட்டளைகள் மூலமும் இந்த பாக்கெட் அலமாரியை நம் தேவைக்கேற்ற வகையில் விரிவுப்படுத்தியும், மூடியும் பயன்படுத்தலாம். மின்சாரம் இல்லாதபோது இந்த பாக்கெட் அலமாரியை கைகளால் நகர்த்தி திறந்து பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இடப்பற்றாக்குறையால் அவதிப்படுபவர்களுக்கு இந்த பாக்கெட் அலமாரி ஒரு வரப்பிரசாதமாக அமையும்.

இந்த பாக்கெட் அலமாரியை போன்று ஷோகேசுடன் மடங்ககூடிய கட்டிலும் இணைந்துள்ள ஒரு பாக்கெட் ஷோகேசையும் இதே நிறுவனம் தயாரித்துள்ளது. 
(காணொளி காட்சி பார்க்க கீழேயுள்ள பிளே பட்டனை தட்டவும்)
-----------------------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர--------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Friday 19 April 2019

பாத்திரங்களில் கண்களை கவரும் கலையோவியங்கள்


சீனாவை சேர்ந்த லியான் யி பிரிண்டிங் மெஷினரி கம்பெனி லிட். ஒழுங்கற்ற வடிவங்களில் அழகான ஓவியங்கள் மற்றும் டிஸைன்களை அச்சிடக்கூடிய அச்சு இயந்திரத்தை தயாரித்துள்ளது.

இந்த அச்சு இயந்திரத்தை கொண்டு பல மணி நேரம்  கடுமையாக சிந்தித்து, உழைத்து செய்யப்பட வேண்டிய அச்சு வேலைகளை சில நொடிகளில் செய்திட முடிகிறது. கிண்ணங்கள், பாத்திரங்கள், தட்டுகள் எல்லாம் சில நொடிகளில் கண்களை கவரும் கலையோவியங்களாக உருமாறும் அதிசயத்தை பார்த்து மகிழுங்கள்...

-----------------------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர--------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday 26 April 2018

ஜி மெயில் - புதிய பதிப்பு - இப்போது அதிக வசதிகளுடன்


லகெங்கும் பல கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ள ஜி- மெயில் இப்போது மேலும் பல புதிய வசதிகளை கொண்டுள்ள புதிய பதிப்பை வெளியிட்டுள்ளது, செய்தி காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் டெக் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் டெக் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள்.

-----------------------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர--------------------------------------------------------
அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்க 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Sunday 8 April 2018

சிறந்த பத்து ஸ்மார்ட்போன்கள் - 2018


தினைந்தாயிரம் ரூபாய் விலை பட்டியலில் கிடைக்கும் சிறந்த பத்து  ஸ்மார்ட்போன்களின் பட்டியல் காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் டெக் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் டெக் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 


Thursday 29 March 2018

துபாயில் பயன்பாட்டுக்கு வந்துள்ள ஏர் டாக்ஸிதுபாய் நாட்டில் தற்போது ஏர் டாக்ஸி பொது மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நமது நாட்டில் ஆட்டோ, டாக்ஸி வாடகைக்கு கிடைப்பது போல் இப்போது துபாய் நாட்டில் ஏர் டாக்ஸி கிடைக்கிறது. ஒருவர் மட்டும் பயணம் செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக நூறு கிலோ எடை வரை இதில் கொண்டு செல்லலாம் (பயணம் செய்யும் மனிதனின் எடையும் சேர்த்து தான்) 


ஓட்டுனர் இல்லாமல் தானாக இயங்க கூடிய (கட்டுப்பாட்டு அறையில் இருந்து இந்த ஏர் டாக்ஸியை கட்டுப்படுத்தலாம்)  இந்த தானியங்கி ஏர் டாக்ஸியில் நாற்பதில் இருந்து ஐம்பது கிலோமீட்டர் தூரம் வரை இதில் பயணிக்கலாம். 

 பயணி ஏர் டாக்ஸியில்  அமர்ந்த பின்னர், பயணிக்க வேண்டிய இலக்கை தொடுதிரையில்       தெரியும்       மேப்பில்     தேர்வு    செய்தவுடன்   பறக்க 
தொடங்குகிறது. இந்த ஏர் டாக்ஸியில் பொருத்தபட்டுள்ள பேட்டரி சக்தி கொண்டு தொடர்ந்து அரை மணி நேரம் வானில் பறக்க முடியும். டிராபிக் தொந்தரவு எதுவுமில்லாமல் பயணிக்க வேண்டிய இடத்துக்கு தாமதமில்லாமல் சென்று சேர இந்த ஏர் டாக்ஸி பயன்படும் என்று நம்பலாம்.  
-----------------------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர--------------------------------------------------------
அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்க 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday 22 March 2018

ஆழ்கடல் ஆராய்ச்சியில் அசத்த போகும் சோஃபி - ரோபோ மீன்


டலில் நீந்தும் உண்மையான மீன் போலவே நீந்துகிறது (MIT's Computer Science and Artificial Intelligence Laboratory) CSAIL ஆய்வகத்தின் ஆராய்ச்சி குழுவினரின்  தயாரிப்பான சோஃபி என்று பெயரிடப்பட்டுள்ள ரோபோ மீன். 

ஆழ்கடலில் மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத குறுகலான அபாயகரமான பகுதிகளுக்கு சென்று ஆராய்ச்சி செய்ய இந்த ரோபோ மீன் உதவும். ரோபோ மீனின் தலைப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா ஆழ்கடல் பகுதியை அழகாக படம் பிடித்து காட்டுகிறது. 


ஒரு மின்னணு சர்க்யூட் பலகையும், லினக்ஸ் இயங்குதளத்தில் இயங்கும் மிக சிறிய கணிப்பொறியும் இந்த ரோபோ மீனின் தலைபகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. தண்ணீரில் நீந்துவதற்கு உதவும் வகையில் இதன் வால் பகுதியை அசைப்பதற்கு வால் பகுதியில் ஒரு ஹைடிராலிக் மோட்டார் பம்ப்பும் பொருத்தப்பட்டுள்ளது. 

எளிதில் வளைய கூடிய சிலிகோன் எலாஸ்டோமீட்டர் கொண்டு இதன் வால் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ மீனின் இயக்கத்தை நீச்சல் வீரர்கள் கட்டுபடுத்துவதற்கு ஒரு ரிமோட் கண்ட்ரோல் சாதனமும் உண்டு. இந்த ரிமோட் தண்ணீரில் அல்ட்ராசோனிக் சிக்னல்கள் மூலம் ரோபோ மீனோடு தொடர்பு கொள்கிறது.  -----------------------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர--------------------------------------------------------
அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்க 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்