Wednesday 13 December 2017

எல்ஜி வி 30 ப்ளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பு நிறுவனமான தென் கொரியாவை சேர்ந்த எல்ஜி நிறுவனத்தின் புதிய வகை  எல்ஜி வி 30 ப்ளஸ் ஸ்மார்ட்போன் நேற்று இந்தியாவில் வெளியிடப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு வெளிவந்த எல்ஜி வி 30 (64 ஜிபி) மாடலுக்கும் இப்போது  வெளிவந்துள்ள எல்ஜி வி 30 ப்ளஸ் (128 ஜிபி) மாடலுக்கும் நினைவக அளவு வேறுபாட்டை தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை.  

6 அங்குல (15.24 செமீ) குவாட் ஹச்.டி+ பி-ஒஎல்இடி தொடுதிரையுடன் (18:9 ஃபுல் விஷன் டிஸ்ப்ளே), 2880*1440 பிக்ஸல்கள் திரை தீர்மானத்துடன்,  அண்ட்ராய்டு v7.1.2 நவ்காட் இயங்குதளத்தில் இயங்கும் எல்ஜி வி 30 பிளஸ், 4 ஜிபி ரேம் உடன் 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன்  835 எஸ்ஒசி  வகை சக்திவாய்ந்த பிராசெசரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இரட்டை கேமரா கொண்டுள்ளது. ஒரு 16 மெகாபிக்சல் கேமராவும், மற்றொரு 13 மெகாபிக்சல் கேமரா 71 டிகிரி அகலக் கோணம் கொண்ட லென்சும் கொண்டுள்ளது. சிறந்த புகைப்படங்கள் எடுக்க மட்டுமல்ல இந்த கேமெராக்கள் (HDR10 வசதி) கொண்டு 4K தரத்தில் வீடியோக்கள் எடுக்கலாம்.  முன்புறத்தில் செல்பி புகைப்படங்கள் எடுக்க வசதியாக 5 மெகாபிக்சல் (90 டிகிரி கோணம் கொண்ட லென்ஸ்) கேமராவை கொண்டுள்ளது. 




மேலும் கை ரேகை சென்சார், லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், அக்ஸிலெரோமீட்டர், பாரோமீட்டர், காம்பஸ், க்யுரோஸ்கோப் ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது. 3300 எம்ஏஹச் பேட்டரி கொண்டு எரியுட்டபடும் எல்ஜி வி 30 பிளஸ் ஸ்மார்ட்போன் அதிவேக மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் கொண்டுள்ளது. 7.3 மிமீ மெல்லிய அளவை கொண்டுள்ள எல்ஜி வி 30 பிளஸ் ஸ்மார்ட்போன் 158 கிராம் எடையைக் கொண்டுள்ளது.

ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ள எல்ஜி வி 30 ப்ளஸ் ஸ்மார்ட்போன் ரூபாய் 44990 -க்கு  அமேசான் வலைதளத்தில் கிடைக்கிறது.