Wednesday, 24 January 2018

மலிவான விலையில் சிசியான் வி 88 ஆண்டிராய்ட் 4K தொலைக்காட்சி பெட்டி சாதனம்

சாதாரண எல்ஈடி தொலைக்காட்சியை ஸ்மார்ட் தொலைக்காட்சியாக மாற்றும் சிசியான் நிறுவனத்தின் வி 88 ஆண்டிராய்ட் 4K தொலைக்காட்சி சாதனம் மலிவான விலையில் (இந்திய ரூபாய் மதிப்பில் 1700 ரூபாய் மட்டும்) கிடைக்கிறது.  

இந்த சாதனம் RK3229 குவாட்கோர் 32 பிட் பிராசெசர் கொண்டு ஆண்டிராய்ட் 6 இயங்குதளத்தில் இயங்குகிறது. இதில் 1 ஜிபி ரேம் மற்றும் 8 ஜிபி நினைவகம் கொண்டுள்ளது. எஸ்.டி கார்ட் கொண்டு 32 ஜிபி வரை நினைவகத்தை அதிகபடுத்தி கொள்ளலாம். நான்கு யுஎஸ்பி போர்ட்கள் மற்றும் தொலைக்காட்சியுடன் இணைக்க ஏவி மற்றும் ஹ்ச்.டி.எம்.ஐ போர்ட்கள் மற்றும் இன்டர்நெட் இணைப்புக்கு ஈதெர்நெட் போர்ட் உள்ளது. இன்டர்நெட் இணைப்பு பெற வைபை வசதியும் கொண்டுள்ளது. உங்கள் ஸ்மார்ட் போனை இந்த சாதனத்துடன் இணைத்து பயன்படுத்தலாம் அல்லது இந்த சாதனத்தில் நிறுவப்பட்டுள்ள ஆப்ஸ்களை பயன்படுத்தி கொள்ளலாம். 



இந்த சாதனத்தை கொண்டு 4K தரத்தில் காணொளி காட்சிகளை பார்க்க முடியும், 3டி திரைப்படங்களையும் இந்த சாதனம் கொண்டு பார்க்க முடியும்.




-----------------------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர



--------------------------------------------------------
அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்க 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday, 18 January 2018

நுகர்வோர் மின்னணு கண்காட்சி (CES2018) - மின்னணு சாதனங்கள் அறிமுகம்


மெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று முடிந்த 2018 ஆம் ஆண்டின் நுகர்வோர் மின்னணு வர்த்தக கண்காட்சியில் (CES- 2018)  புதிதாக அறிமுகபடுத்தப்பட்ட சில மின்னணு சாதனங்கள்:

* விவோ ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் - தொடுதிரையில் இடம்பெற்றிருக்கும் கைரேகை ஸ்கேனர். கைரேகை ஸ்கேனர் முதன்முதலாக ஸ்மார்ட்போனின் தொடுதிரை பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* ரேசர் - லிண்டா - சாதரணமாக நாம் பயன்படுத்தும் லாப்டாப் போன்று காட்சியளிக்கும் 13 இன்ச் திரை மற்றும் விசைபலகை கொண்டிருக்கும் இந்த கருவியில் டிராக்பாட் உள்ள இடத்தில உங்கள் ஸ்மார்ட்போனை பொருத்தி விட்டால், ஸ்மார்ட்போனில் உள்ள பிராசெசர்  மற்றும் நினைவகத்தை பயன்படுத்தி இக்கருவி இயங்க தொடங்குகிறது.

* சாம்சங் நிறுவனத்தின் (The Wall) பெரிய சுவர் போன்று காட்சியளிக்கும் 146  இன்ச் பெரிய திரை மைக்ரோ எல்.ஈ.டி தொலைக்காட்சி.

* கூகுள் ஸ்மார்ட் அஸிஸ்டென்ட்: கூகுள் நிறுவனம் சோனி மற்றும் ஜேபிஎல் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ஸ்மார்ட் திரையுடன் கூடிய ஸ்மார்ட் அஸிஸ்டென்ட் தயாரித்து உள்ளது. இந்த ஸ்மார்ட் அஸிஸ்டென்ட் அமேசான் நிறுவனத்தின் எகோ கருவிக்கு போட்டியாக களமிறக்கப்பட உள்ளது.

* ஆக்குலஸ் நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனத்துடன் இணைந்து மி விஆர் ஸ்டாண்ட் அலோன் மற்றும் ஆக்குலஸ் கோ என்ற இரண்டு புதிய வகை வி ஆர் ஹெட்செட்களை அறிமுகபடுத்தியுள்ளது. 

* சீன எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான பைடான் நிறுவனத்தின் புதிய அறிமுகமான இந்த எஸ்.யு.வி காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது உரிமையாளரின் முகத்தை பதிவு செய்து வைத்து கொண்டு அடையாளம் காணும் திறனுடன், பக்கவாட்டில் கண்ணாடிகளுக்கு பதில் கேமெராக்கள், 49 இன்ச் அகலம் கொண்ட பயனாளர் பகுதியை கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர உள்ளது. இந்த காரின் விலை 45௦௦௦ டாலர்கள்.

* கணிணிகளை கேமிங்குக்காக (விளையாட்டு) பயன்படுத்தும் எல்லோரும் அறிந்திருக்கும் பிரேடேட்டர் நிறுவனத்தின் பிரேடேட்டர் 9000 அறிமுகபடுத்தபட்டுள்ளது.  இன்டெல் கோர் ஐ 9 பிராசெசர் கொண்டு இயங்கும் இந்த கருவி கொண்டு எல்லா வகையான கணிணி விளையாட்டுகளையும் வேகம் குறையாமல் தடையின்ரி விளையாட முடியும். 

* சோனி எக்ஸ்பிரியா நிறுவனம் ஸ்நாப்டிராகன் 620  பிராசெசர் கொண்டு இயங்கும் (XA2XA2, ULTRA & L2) எக்ஸ்ஏ2எக்ஸ்ஏ2, அல்ட்ரா என்ற 5.2 இன்ச் மற்றும் 6 இன்ச் முழு எச்.டி திரை கொண்ட இரண்டு புதிய வகை ஸ்மார்ட்போன்களை அறிமுகபடுத்தியுள்ளது. இது தவிர எக்ஸ்பிரியா எல்2 என்ற 5.5 இன்ச் எச்.டி திரை கொண்ட விலை குறைவான ஸ்மார்ட்போனையும்
சோனி எக்ஸ்பிரியா நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ளது. 



* இது தவிர கடந்த ஆண்டு அறிமுகபடுத்தப்பட்ட சோனி நிறுவனத்தின் ஐபோ என்ற ரோபோ வகை நாய்குட்டியும் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவுடன் மீண்டும் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

-----------------------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர



--------------------------------------------------------
அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்க 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday, 10 January 2018

டொயோட்டாவின் 'இ-பாலெட்' - தானியங்கி மொபைல் வாகனம்


பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான டொயோட்டா நிறுவனம் வாகன ஒட்டி இல்லாமல் தானாக இயங்கும் தானியங்கி வாகனத்தை தயாரித்து விற்பனை செய்ய உள்ளது. 'இ-பாலெட்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த வாகனம், வரும் 2020 ஆம் ஆண்டு முதல் விற்பனைக்கு வரும் என்று தெரிகிறது. 

நம் ஊரில் மொபைல் வாகனங்களில் வைத்து உணவுபொருட்களை விற்கும்  வியாபாரம் செய்பவர்களை பார்த்திருப்பீர்கள், அதே முறை தான் இது ஆனால் இங்கே வாகனத்தை இயக்க ஆள் தேவையில்லை, தானாகவே இயங்கும் தானியங்கி வாகனம் இது.   

இதன் உள்கட்டமைப்பை நம் தேவைக்கேற்ப சிறிது மாற்றி வடிவமைத்தால் எப்படி எல்லாம் பயன்படுத்தலாம் என்று பாருங்கள்: 



இந்த தானியங்கி வாகனம் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பொருட்களை டெலிவரி செய்யும் டெலிவரி வாகனமாகவும் பயன்படுத்தலாம்.  
  
ஓலா, உபெர் போன்ற வாடகை கார் நிறுவனங்கள் பயணிகள் பகிர்ந்து பயன்படுத்தும் (ரைட் ஷேர் முறையில்) வாடகை காராகவும் பயன்படுத்தலாம்.  

விருந்தினர்கள் தங்கும் மொபைல் ஹோட்டல் ஆகவும் பயன்படுத்தலாம்.

பொருட்கள் விற்பனை செய்யும் மொபைல் சூப்பர் மார்கெட் ஆகவும் பயன்படுத்தலாம்.  
-----------------------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர



--------------------------------------------------------
அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்க 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday, 4 January 2018

ஃபேஷன் விரும்பிகள் நம்பி வாங்கும் - எகோ லுக் கேமரா



மேசான் ஆன்லைன் ஷாப்பிங் நிறுவனம் எகோ லுக்  என்ற புதிய வகை கேமராவை அறிமுகபடுத்தியுள்ளது. ஃபேஷன் விரும்பிகளுக்கு இந்த எகோ லுக் கேமரா மிகவும் பயனுள்ளதாக இருக்கும், இந்த கேமராவை இயக்க நீங்கள் உங்கள் கைகளை பயன்படுத்த வேண்டிய தேவை இல்லை, இந்த கேமரா முன் நின்று கொண்டு உங்கள் குரல் மூலம் நீங்கள் புகைப்படம் அல்லது வீடியோ எடுக்க இந்த கேமராவுக்கு கட்டளை கொடுத்தால் போதும் அலெக்சா என்ற மேக கணினி சார்ந்த குரல் சேவையுடன் இணைக்கபட்டிருக்கும் எகோ லுக் கேமரா நீங்கள் விரும்பும் விதத்தில் புகைபடங்கள் அல்லது வீடியோக்களை எடுத்து தருகிறது. 



புகைப்படம் அல்லது வீடியோ எடுப்பதோடு எகோ லுக் கேமராவின் வேலை முடிந்து விடுவதில்லை, உங்கல் ஸ்மார்ட் போனுடன் நேரம், மாறும் வானிலை மற்றும் செல்லுமிடம் (ஷாப்பிங், பார்ட்டி, கலை நிகழ்ச்சி, அலுவலகம், பூங்கா, கடற்கரை, விருந்து விசேஷ நிகழ்ச்சிகள்)  இவற்றுக்கு ஏற்ப தகுந்த ஆடைகளை தேர்வு செய்வதிலும்  உங்களுக்கு உதவுகிறது. உதாரணத்திற்கு கடற்கரைக்கு செல்வதற்கு முன் நீங்கள் வீட்டுக்குள் எடுத்துள்ள புகைப்படங்களை கொண்டு, அந்த புகைப்படங்களின் பின்னணியில்    கடற்கரை    காட்சிகளை    வைத்து     நீங்கள்     அணிந்துள்ள உடைகளில் எந்த புகைப்படத்தில் உள்ள உடை உங்களுக்கு கடற்கரையில் எவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்று சொல்கிறது, இப்படி பல்வேறு உடைகளில் நீங்கள் புகைப்படம் எடுத்து வைத்து கொண்டால் அந்த புகைப்படங்களில் உங்கள் பின்னணியில் உள்ள காட்சியை மாற்றி எந்தெந்த இடங்களுக்கு எந்த உடை அணிந்து செல்வது பொருத்தமாக இருக்கும் என்று ஸ்டைல் செக் என்ற ஸ்மார்ட் போன் சேவை மூலம் உங்களுக்கு தெரிவிக்கிறது, மேலும் உங்கள் புகைப்படங்கள், காணொளி காட்சிகளை சமூக ஊடகங்கள்  மூலம் உடனுக்குடன் உங்கள் நண்பர்கள் வட்டத்தில் பகிர்ந்து கொள்ளும் வசதியையும் அளிக்கிறது. 



இந்த எகோ லுக் கேமராவில், வீட்டிற்குள்ளேயே புகைப்பட ஸ்டுடியோ போன்று ஒளி வெள்ளம் தரும் எல் இ டி ப்ளாஷ் விளக்குகள், ஒரு சிறிய 1.6 வாட் திறன் கொண்ட ஸ்பீக்கர் - குரல் சேவைகள் அளிக்க, பாடல்கள் கேட்க, குரல் மூலம் இயங்கும் ஸ்மார்ட் வீட்டு உபயோக பொருட்களின் - ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் ஏ.சி,   இயக்கத்தை கட்டுப்படுத்தவும் பயன்படுகிறது. 

ஒரு தேர்ந்த ஃபேஷன் நிபுணரை போன்று செயல்படும் இந்த எகோ லுக் கேமராவை கொண்டு,  புதிய உடைகளை வாங்குவதற்கு முன்,  அந்த உடையை ஒரு முறை அணிந்து புகைப்படம் எடுத்து  பார்த்தால் அந்த உடை உங்களுக்கு எவ்வளவு பொருத்தமாக இருக்கும் என்று தெரிந்து விடும், பின்பு அந்த உடையை வாங்கலாமா, வேண்டாமா என்று முடிவு செய்யலாம். சரியான உடைகளையும் தேர்வு செய்ய முடியும், அனாவசிய செலவையும் கட்டுபடுத்தலாம்.
-----------------------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------------------------
அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்க 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday, 28 December 2017

2017ஆம் ஆண்டின் சிறந்த ஐந்து கண்டுபிடிப்புகள்




அல்ட்ரா லாக் ஸ்மார்ட் லாக்
வீடு, அலுவலக கதவுகள் பூட்டு போட்டு பூட்டிய பின் சாவியை எங்காவது மறந்து வைத்து விட்டால் பிறகு எங்கு வைத்தோம் என்று தேடுவதிலேயே நேரம் வீணாகும், வைத்த இடம் நினைவுக்கு வராமல், மாற்று சாவியும் பூட்டிய வீட்டுக்குள்  வைத்திருந்தால் அவ்வளவுதான் அன்றோடு அந்த பூட்டின் ஆயுள் முடிந்து விடும்,  இந்த பூட்டு சாவி பிரச்சினைக்கு முடிவு கட்டும் கண்டுபிடிப்பு தான் அல்ட்ரா லாக் ஸ்மார்ட் லாக், ப்ளுடூத் வசதியுடன் கூடிய கைரேகை ஸ்கேனர், டச் ஸ்க்ரீன் ஸ்மார்ட் லீவர் வசதிகளுடன் வெளிவந்துள்ளது. கதவில் பூட்டுக்கு பதில் இந்த  இந்த ஸ்மார்ட் லாக்கை பொருத்தி விடலாம். ஸ்மார்ட்லாக்கை திறக்க உங்கள் கை ரேகை பயன்படுத்தலாம், சாவியும் பயன்படுத்தலாம், ஸ்மார்ட்போனில் டாப் செய்வதன் மூலமும் திறக்கலாம், ஸ்மார்ட்போன் திரையை திறக்க பயன்படும் நம்பர் லாக் வசதியையும் பயன்படுத்தலாம். பேட்டரி மூலம் இயங்கும் இந்த ஸ்மார்ட் லாக்கை ஒரு முறை சார்ஜ் செய்தால் பல மாதங்கள் வரை பயன்படுத்தலாம். 

சார்ஜ்-எஸ்டி
பல நாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் சந்திக்கும் மிக பெரிய சிக்கல் ஒவ்வொரு நாட்டிலும் பயன்பாட்டில் இருக்கும் விதவிதமான எலெக்ட்ரிக் பிளக்குகள், இந்த பிளக்குகளில் நம் நாட்டு சார்ஜர் பின் பொருந்தாது, இந்த சிக்கலை தீர்க்க வந்துள்ள கருவி தான் சார்ஜ்-எஸ்டி பலவிதமான பிளக் பின்களை கொண்டுள்ள இந்த சார்ஜ்-எஸ்டி, அதோடு கூட பலவிதமான மின்னணு சாதனங்களுக்கேற்ற சார்ஜர் பின்களையும் கொண்டுள்ளது. 

போன் டிரோன் - இதோஸ்
உயரமான கட்டிடங்கள், மலைபிரதேசங்களை ஏரியல் வியூவில் பறந்து கொண்டே படம் பிடிக்க உதவும் டிரோன், உங்கள் ஸ்மார்ட்போனை இந்த டிரோனில் பொருத்திவிட்டு பறக்க விட்டால்  அழகான இயற்கை காட்சிகளை படமாக்கி நம் கண்களுக்கு விருந்தளிக்கிறது போன் டிரோன் - இதோஸ்.  

மூசோ (ஒலி கட்டுபாட்டு கருவி)
அமைதியாக வேலை பார்க்க விடாமல் உங்களை உங்கள் சுற்றுபுறத்தில் இருந்து வரும் சத்தங்கள் தொந்தரவு செய்கிறதா? உங்கள் பிரச்சினையை தீர்க்கும் கண்டுபிடிப்பு தான் மூசோ, நீங்கள் அதிக சப்தம் வரும் இடங்களில் (வீடோ, அலுவலகமோ, வெளியிடங்களோ) இந்த கருவியை பொருத்திவிட்ட்டு சுவிட்சை அழுத்திவிட்டால் போதும், உங்கள் சுற்றியுள்ள ஒலி மற்றும் அதிர்வுகளை இந்த கருவி கவர்ந்து கொள்வதால் உங்களை சுற்றி அமைதி தவழும்.  அமைதியாக இருக்க விரும்புபவர்களுக்கு இந்த கருவி ஒரு வரப்பிரசாதம்.     


இயான் ஸ்கூட்டர்:
இந்த ஸ்கூட்டரை நிறுத்தி வைக்க இடம் தேவையில்லை கைக்கு அடக்கமாக சூட்கேஸ் போல் இந்த ஸ்கூட்டரை மடித்து வைத்து கொள்ளலாம், தேவைபடும்போது ஸ்கூட்டரை பயணத்திற்கு பயன்படுத்தி கொள்ளலாம். நம் வசதிக்கேற்ப நின்று கொண்டோ அல்லது அமர்ந்து கொண்டோ இந்த ஸ்கூட்டரில் பயணிக்கலாம். 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday, 20 December 2017

இந்த மாதத்தின் டாப் 10 ஆன்ட்ராய்ட் (இலவச) ஆப்ஸ்


வ்வொரு நாளும் புதிது புதிதாக ஆன்ட்ராய்ட் ஆப்ஸ்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன, இதுவரை 2.8 மில்லியன் ஆன்ட்ராய்ட் ஆப்கள் வெளிவந்துள்ளன, அவற்றில் இந்த மாதத்தில் மிகவும் பயனுள்ள ஆப்களை அதன் சிறப்பம்சங்கள், பயன்பாடு மற்றும் வெளியிட்ட நாள் போன்றவற்றை கருத்தில் கொண்டு  தொகுக்கபட்டுள்ளது.

1 பேட்டரி மீட்டர் ஓவர்லே - Battery Meter Overlay 
ஸ்மார்ட் போன் பேட்டரி சார்ஜ் இருப்பு சதவிகிதத்தை ஸ்க்ரீனின் மேல் பகுதியில் காண்பிக்கும் இந்த ஆப் சார்ஜ் அளவை வைத்து நாம் எந்தெந்த ஆப்களை (கேம்ஸ் விளையாடுவது, காணொளி பார்ப்பது, இணைய உலவி பார்ப்பது) எப்போது பயன்படுத்தலாம் என்று காண்பிக்கிறது. சார்ஜ் அளவை பொறுத்து நாம் ஸ்க்ரீன் பின்னணியை மாற்றி வைத்து கொள்ளும் வசதியையும் இந்த பேட்டரி மீட்டர் ஓவர்லே ஆப் வழங்குகிறது.  

2  ஃபேன்டம் - Fandom 
இந்த ஆப்பில் உங்களுக்கு பிடித்தமான பொழுதுபோக்கு (பிடித்த சினிமா, தொலைக்காட்சி தொடர், நடிகர்கள்...) விஷயங்களின் தலைப்புகளை தேர்ந்தெடுத்து கொள்ளலாம், நீங்கள் தேர்ந்தெடுத்த தலைப்புகளில் எந்த புதிய செய்தி வந்தாலும் உடனுக்குடன் இந்த ஃபேன்டம் ஆப் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

3  ஃபைல்ஸ் கோ (கூகுள் தயாரிப்பு) - Files Go By Google 
கூகுள் நிறுவன தயாரிப்பான ஃபைல்ஸ் கோ நீங்கள் ஸ்மார்ட் போனில் சேமித்து வைத்திருக்கும் அணைத்து கோப்புகளையும் (புகைப்படங்கள், காணொளி காட்சிகள், ஆப்கள்...) ஒரே இடத்தில காணவும் தேவையற்ற கோப்புகளை அழித்து விடவும், நினைவக சேமிப்பை அதிகப்படுத்தவும் உதவுகிறது. இணைய தொடர்பு இல்லாமல் கோப்புகளை நண்பர்களுடன் பகிரவும் ஃபைல்ஸ் கோ ஆப் பயன்படுகிறது. 


4  எக்ஸ் ஹோம் பார் - X Home Bar 
ஸ்மார்ட் போனில் உள்ள ஹோம் பட்டன் சரியாக வேலை பார்க்கவில்லையா? எக்ஸ் ஹோம் பார் ஆப் நிறுவினால் அது ஐ போன் 10ல் உள்ள ஹோம் ஸ்க்ரீன் போன்ற வசதியை அளிக்கிறது,  இடப்புறம் ஸ்வைப் செய்தால் மல்டிடாஸ்கிங் வசதியையும், வலப்புறம் ஸ்வைப் செய்தால் நோட்டிஃபிக்கேஷன் பேனலையும், மேல்நோக்கி ஸ்வைப் செய்தால் ஹோம் ஸ்க்ரீனையும் காணலாம். இந்த ஆப்பை உங்கள் தேவைக்கேற்ப செட்டிங்க்ஸ் பகுதியில் ஸ்வைப்  ஆக்-ஷன்களை மாற்றி கொள்ளலாம்.
-

5  டேட்டாலி (கூகுள் தயாரிப்பு) - Datally By Google 
கூகுள் நிறுவன தயாரிப்பான டேடால்லி, ஒவ்வொரு ஆப்பையும் எவ்வளவு நேரம் பயன்படுத்துகிறீர்கள், எவ்வளவு மொபைல் டேட்டா பயன்டுத்தி இருக்கிறீர்கள் என்று தகவல்களை அளிக்கிறது,  அதோடு கூட வை பை இணைப்பின் போது மட்டும் சில ஆப்களை பயன்படுத்த அனுமதிக்கும் வசதியையும் அளிக்கிறது,  மொபைல் டேட்டா சேமிக்க விரும்புபவர்களுக்கு  டேட்டாலி ஆப் நிச்சயமாக  பயன்படும்.

6  ஸ்மார்ட் வால்பேப்பர் - Smart Wallpaper 
ஸ்மார்ட் போனில் ஒரே வால்பேப்பர் பார்த்து பார்த்து போரடிக்கிறதா ஸ்மார்ட் வால்பேப்பர்  ஆப் நேரத்துக்கு, வாரத்துக்கு, மாதத்துக்கு, மாறும் வானிலைக்கு தகுந்தாற் போல் வால்பேப்பரை மாற்றி கொண்டே இருக்கும், உங்களுக்கு பிடித்தமான வால்பேப்பரை நீங்கள் தரவிறக்கி வைத்து கொண்டால் போதும், இந்த ஆப் உங்களுக்கு விருப்பமான சேமிக்கப்பட்ட வால்பேப்பர்களை நேரத்திற்கு தகுந்தது போல் மாற்றி விடும்.  

7  ஸ்மார்ட் லென்ஸ் - Smart Lens 
ஸ்மார்ட் லென்ஸ் ஆப் கொண்டு பேப்பரில் உள்ள எழுத்துக்களை புகைப்படம் எடுத்து கொள்ளவும், பின் இந்த ஆப் அந்த புகைப்படத்தில் உள்ள எழுத்துக்களை பிடிஎப் கோப்பாக சேமித்து வைத்து கொள்ளலாம், பல மொழிகளில் உள்ள எழுத்துக்களை உங்கள் ஸ்மார்ட்போனில் கோப்புகளாக சேமித்து வைத்துகொள்ள இந்த ஸ்மார்ட் லென்ஸ் ஆப் பயன்படுகிறது. 

8  டிராயர்ஸ் - Drawers 
உங்களுக்கு விருப்பமான ஆப்களை அதன் பயன்பாட்டுக்கு (மெயில்கள் படிக்க, செய்தி வாசிக்க, காணொளி பார்க்க...) ஏற்றவாறு ஒவ்வொரு வகையிலும் ஐந்து ஆப்களை சேமித்து வைத்து கொண்டு அதை எளிதில் ஸ்மார்ட் போனின் வலப்புபுறத்திலிருந்து ஸ்வைப் செய்து  எடுத்து கொள்ளும் வசதியை அளிக்கிறது டிராயர்ஸ் ஆப்.   

9  ரெட்ரோ இணைய உலவி - RetroBrowser 
இந்த ரெட்ரோ இணைய உலவியை கால எந்திரம் என்று கூட சொல்லலாம், ஒரு இணையதளம் கடந்த வருடத்தில் அல்லது கடந்த மாதத்தில் எப்படி காட்சியளித்ததோ அதே போல் காட்டக்கூடிய வசதியை இந்த ரெட்ரோ இணைய உலவி நமக்கு வழங்குகிறது. மற்றபடி எல்லா இணைய உலவிகளிலும் உள்ள வசதிகளும் இந்த ரெட்ரோ இணைய உலவியிலும் கிடைக்கிறது. 

10  ஸ்க்ரிட்டர்  -  Scrittor 
ஸ்க்ரிட்டர், நோட்ஸ்களை வகைபடுத்தி பிரித்து வைத்து தேவைப்படும்போது எளிதாக எடுத்து படிக்க உதவும் ஆப் இது. 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday, 13 December 2017

எல்ஜி வி 30 ப்ளஸ் ஸ்மார்ட்போன் அறிமுகம்

விலையுயர்ந்த ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பு நிறுவனமான தென் கொரியாவை சேர்ந்த எல்ஜி நிறுவனத்தின் புதிய வகை  எல்ஜி வி 30 ப்ளஸ் ஸ்மார்ட்போன் நேற்று இந்தியாவில் வெளியிடப்பட்டு விற்பனைக்கு வந்துள்ளது. இதற்கு முன்பு வெளிவந்த எல்ஜி வி 30 (64 ஜிபி) மாடலுக்கும் இப்போது  வெளிவந்துள்ள எல்ஜி வி 30 ப்ளஸ் (128 ஜிபி) மாடலுக்கும் நினைவக அளவு வேறுபாட்டை தவிர வேறு எந்த வித்தியாசமும் இல்லை.  

6 அங்குல (15.24 செமீ) குவாட் ஹச்.டி+ பி-ஒஎல்இடி தொடுதிரையுடன் (18:9 ஃபுல் விஷன் டிஸ்ப்ளே), 2880*1440 பிக்ஸல்கள் திரை தீர்மானத்துடன்,  அண்ட்ராய்டு v7.1.2 நவ்காட் இயங்குதளத்தில் இயங்கும் எல்ஜி வி 30 பிளஸ், 4 ஜிபி ரேம் உடன் 2.45 ஜிகாஹெர்ட்ஸ் ஆக்டா-கோர் குவால்காம் ஸ்நாப்டிராகன்  835 எஸ்ஒசி  வகை சக்திவாய்ந்த பிராசெசரை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் இரட்டை கேமரா கொண்டுள்ளது. ஒரு 16 மெகாபிக்சல் கேமராவும், மற்றொரு 13 மெகாபிக்சல் கேமரா 71 டிகிரி அகலக் கோணம் கொண்ட லென்சும் கொண்டுள்ளது. சிறந்த புகைப்படங்கள் எடுக்க மட்டுமல்ல இந்த கேமெராக்கள் (HDR10 வசதி) கொண்டு 4K தரத்தில் வீடியோக்கள் எடுக்கலாம்.  முன்புறத்தில் செல்பி புகைப்படங்கள் எடுக்க வசதியாக 5 மெகாபிக்சல் (90 டிகிரி கோணம் கொண்ட லென்ஸ்) கேமராவை கொண்டுள்ளது. 




மேலும் கை ரேகை சென்சார், லைட் சென்சார், ப்ராக்ஸிமிட்டி சென்சார், அக்ஸிலெரோமீட்டர், பாரோமீட்டர், காம்பஸ், க்யுரோஸ்கோப் ஆகிய வசதிகளையும் கொண்டுள்ளது. 3300 எம்ஏஹச் பேட்டரி கொண்டு எரியுட்டபடும் எல்ஜி வி 30 பிளஸ் ஸ்மார்ட்போன் அதிவேக மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் வசதிகளும் கொண்டுள்ளது. 7.3 மிமீ மெல்லிய அளவை கொண்டுள்ள எல்ஜி வி 30 பிளஸ் ஸ்மார்ட்போன் 158 கிராம் எடையைக் கொண்டுள்ளது.

ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ள எல்ஜி வி 30 ப்ளஸ் ஸ்மார்ட்போன் ரூபாய் 44990 -க்கு  அமேசான் வலைதளத்தில் கிடைக்கிறது.