Thursday 18 January 2018

நுகர்வோர் மின்னணு கண்காட்சி (CES2018) - மின்னணு சாதனங்கள் அறிமுகம்


மெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் நடைபெற்று முடிந்த 2018 ஆம் ஆண்டின் நுகர்வோர் மின்னணு வர்த்தக கண்காட்சியில் (CES- 2018)  புதிதாக அறிமுகபடுத்தப்பட்ட சில மின்னணு சாதனங்கள்:

* விவோ ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் - தொடுதிரையில் இடம்பெற்றிருக்கும் கைரேகை ஸ்கேனர். கைரேகை ஸ்கேனர் முதன்முதலாக ஸ்மார்ட்போனின் தொடுதிரை பகுதியில் அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

* ரேசர் - லிண்டா - சாதரணமாக நாம் பயன்படுத்தும் லாப்டாப் போன்று காட்சியளிக்கும் 13 இன்ச் திரை மற்றும் விசைபலகை கொண்டிருக்கும் இந்த கருவியில் டிராக்பாட் உள்ள இடத்தில உங்கள் ஸ்மார்ட்போனை பொருத்தி விட்டால், ஸ்மார்ட்போனில் உள்ள பிராசெசர்  மற்றும் நினைவகத்தை பயன்படுத்தி இக்கருவி இயங்க தொடங்குகிறது.

* சாம்சங் நிறுவனத்தின் (The Wall) பெரிய சுவர் போன்று காட்சியளிக்கும் 146  இன்ச் பெரிய திரை மைக்ரோ எல்.ஈ.டி தொலைக்காட்சி.

* கூகுள் ஸ்மார்ட் அஸிஸ்டென்ட்: கூகுள் நிறுவனம் சோனி மற்றும் ஜேபிஎல் போன்ற நிறுவனங்களுடன் இணைந்து ஸ்மார்ட் திரையுடன் கூடிய ஸ்மார்ட் அஸிஸ்டென்ட் தயாரித்து உள்ளது. இந்த ஸ்மார்ட் அஸிஸ்டென்ட் அமேசான் நிறுவனத்தின் எகோ கருவிக்கு போட்டியாக களமிறக்கப்பட உள்ளது.

* ஆக்குலஸ் நிறுவனம் ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனமான சியோமி நிறுவனத்துடன் இணைந்து மி விஆர் ஸ்டாண்ட் அலோன் மற்றும் ஆக்குலஸ் கோ என்ற இரண்டு புதிய வகை வி ஆர் ஹெட்செட்களை அறிமுகபடுத்தியுள்ளது. 

* சீன எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான பைடான் நிறுவனத்தின் புதிய அறிமுகமான இந்த எஸ்.யு.வி காண்போரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது உரிமையாளரின் முகத்தை பதிவு செய்து வைத்து கொண்டு அடையாளம் காணும் திறனுடன், பக்கவாட்டில் கண்ணாடிகளுக்கு பதில் கேமெராக்கள், 49 இன்ச் அகலம் கொண்ட பயனாளர் பகுதியை கொண்டிருக்கும் இந்த எலெக்ட்ரிக் கார் அடுத்த ஆண்டு விற்பனைக்கு வர உள்ளது. இந்த காரின் விலை 45௦௦௦ டாலர்கள்.

* கணிணிகளை கேமிங்குக்காக (விளையாட்டு) பயன்படுத்தும் எல்லோரும் அறிந்திருக்கும் பிரேடேட்டர் நிறுவனத்தின் பிரேடேட்டர் 9000 அறிமுகபடுத்தபட்டுள்ளது.  இன்டெல் கோர் ஐ 9 பிராசெசர் கொண்டு இயங்கும் இந்த கருவி கொண்டு எல்லா வகையான கணிணி விளையாட்டுகளையும் வேகம் குறையாமல் தடையின்ரி விளையாட முடியும். 

* சோனி எக்ஸ்பிரியா நிறுவனம் ஸ்நாப்டிராகன் 620  பிராசெசர் கொண்டு இயங்கும் (XA2XA2, ULTRA & L2) எக்ஸ்ஏ2எக்ஸ்ஏ2, அல்ட்ரா என்ற 5.2 இன்ச் மற்றும் 6 இன்ச் முழு எச்.டி திரை கொண்ட இரண்டு புதிய வகை ஸ்மார்ட்போன்களை அறிமுகபடுத்தியுள்ளது. இது தவிர எக்ஸ்பிரியா எல்2 என்ற 5.5 இன்ச் எச்.டி திரை கொண்ட விலை குறைவான ஸ்மார்ட்போனையும்
சோனி எக்ஸ்பிரியா நிறுவனம் அறிமுகபடுத்தியுள்ளது. 



* இது தவிர கடந்த ஆண்டு அறிமுகபடுத்தப்பட்ட சோனி நிறுவனத்தின் ஐபோ என்ற ரோபோ வகை நாய்குட்டியும் மேம்படுத்தப்பட்ட செயற்கை நுண்ணறிவுடன் மீண்டும் அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.

-----------------------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர



--------------------------------------------------------
அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்க 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்