Thursday, 29 March 2018

துபாயில் பயன்பாட்டுக்கு வந்துள்ள ஏர் டாக்ஸி

துபாய் நாட்டில் தற்போது ஏர் டாக்ஸி பொது மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நமது நாட்டில் ஆட்டோ, டாக்ஸி வாடகைக்கு கிடைப்பது போல் இப்போது துபாய் நாட்டில் ஏர் டாக்ஸி கிடைக்கிறது. ஒருவர் மட்டும் பயணம் செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக நூறு கிலோ எடை வரை இதில் கொண்டு செல்லலாம் (பயணம் செய்யும் மனிதனின் எடையும் சேர்த்து தான்) 

ஓட்டுனர் இல்லாமல் தானாக இயங்க கூடிய (கட்டுப்பாட்டு அறையில் இருந்து இந்த ஏர் டாக்ஸியை கட்டுப்படுத்தலாம்)  இந்த தானியங்கி ஏர் டாக்ஸியில் நாற்பதில் இருந்து ஐம்பது கிலோமீட்டர் தூரம் வரை இதில் பயணிக்கலாம். 

 பயணி ஏர் டாக்ஸியில்  அமர்ந்த பின்னர், பயணிக்க வேண்டிய இலக்கை தொடுதிரையில்       தெரியும்       மேப்பில்     தேர்வு    செய்தவுடன்   பறக்க 
தொடங்குகிறது. இந்த ஏர் டாக்ஸியில் பொருத்தபட்டுள்ள பேட்டரி சக்தி கொண்டு தொடர்ந்து அரை மணி நேரம் வானில் பறக்க முடியும். டிராபிக் தொந்தரவு எதுவுமில்லாமல் பயணிக்க வேண்டிய இடத்துக்கு தாமதமில்லாமல் சென்று சேர இந்த ஏர் டாக்ஸி பயன்படும் என்று நம்பலாம்.  
-----------------------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர

--------------------------------------------------------
அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்க 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday, 22 March 2018

ஆழ்கடல் ஆராய்ச்சியில் அசத்த போகும் சோஃபி - ரோபோ மீன்

டலில் நீந்தும் உண்மையான மீன் போலவே நீந்துகிறது (MIT's Computer Science and Artificial Intelligence Laboratory) CSAIL ஆய்வகத்தின் ஆராய்ச்சி குழுவினரின்  தயாரிப்பான சோஃபி என்று பெயரிடப்பட்டுள்ள ரோபோ மீன். 

ஆழ்கடலில் மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத குறுகலான அபாயகரமான பகுதிகளுக்கு சென்று ஆராய்ச்சி செய்ய இந்த ரோபோ மீன் உதவும். ரோபோ மீனின் தலைப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா ஆழ்கடல் பகுதியை அழகாக படம் பிடித்து காட்டுகிறது. 

ஒரு மின்னணு சர்க்யூட் பலகையும், லினக்ஸ் இயங்குதளத்தில் இயங்கும் மிக சிறிய கணிப்பொறியும் இந்த ரோபோ மீனின் தலைபகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. தண்ணீரில் நீந்துவதற்கு உதவும் வகையில் இதன் வால் பகுதியை அசைப்பதற்கு வால் பகுதியில் ஒரு ஹைடிராலிக் மோட்டார் பம்ப்பும் பொருத்தப்பட்டுள்ளது. 

எளிதில் வளைய கூடிய சிலிகோன் எலாஸ்டோமீட்டர் கொண்டு இதன் வால் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ மீனின் இயக்கத்தை நீச்சல் வீரர்கள் கட்டுபடுத்துவதற்கு ஒரு ரிமோட் கண்ட்ரோல் சாதனமும் உண்டு. இந்த ரிமோட் தண்ணீரில் அல்ட்ராசோனிக் சிக்னல்கள் மூலம் ரோபோ மீனோடு தொடர்பு கொள்கிறது.  

-----------------------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர

--------------------------------------------------------
அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்க 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday, 8 March 2018

சீனாவை அசத்தும் தண்ணீரில் மிதக்கும் ஸ்மார்ட் போன் வீடியோ விளம்பரம்

சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ விளம்பரம் அந்த நாட்டில் வைரல் ஆகி வருகிறது, அந்த ஸ்மார்ட்போனில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா? அது வாட்டர்ப்ரூஃப், ஷாக்ப்ரூஃப் கொண்டது மட்டுமல்ல சிங்கிங் ப்ரூஃப்பும் (தண்ணீரில் மிதக்கும்) கொண்டுள்ளது. ஆனால் விளம்பரம் வைரல் ஆனது அந்த  ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களால் மட்டுமல்ல விளம்பரத்தை ஒரு முறை பாருங்கள் உங்களுக்கே புரியும். 

-----------------------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர

--------------------------------------------------------
அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்க 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday, 22 February 2018

ஓட்டுனர் இல்லாமல் தானாக இயங்கும் தானியங்கி பேருந்து

மெர்சிடிஸ் பென்ஸ் நிறுவனம் ஓட்டுனர் இல்லாமல் தானாக இயங்ககூடிய தானியங்கி பேருந்துகளை தயாரித்து விற்பனை செய்ய துவங்கியுள்ளது, அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள தானியங்கி பேருந்து விளம்பரம்... இது போன்ற பேருந்து ஓட்டுனர் இல்லாமல் தானாக இயங்ககூடிய தானியங்கி பேருந்துகள் இப்போது சீனா, ஜப்பான் நாட்டு சாலைகளில் ஓட துவங்கி விட்டன... செய்தி  காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் டெக் டைம்ஸ் யூ டியுப்  சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் டெக் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 

-----------------------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர

--------------------------------------------------------
அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்க 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday, 15 February 2018

பெண்களை பாதுகாக்க சீனுகுமாரி தயாரித்த ஹைடெக் பாதுகாப்பு உடை

த்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஃபரூக்காபாத் நகரத்தில் வசிக்கும் ஒரு ஏழை குடும்பத்தை சேர்ந்த சீனுகுமாரி பெண்களை பாலியல் பலாத்காரத்திலிருந்து பாதுகாக்கும் ஒரு  உள்ளாடையை வடிவமைத்துள்ளார். செய்தி காணொளி காட்சி வடிவில், காணொளி காட்சி பிடித்திருந்தால் டெக் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் டெக் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 

-----------------------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர

--------------------------------------------------------
அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்க 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday, 8 February 2018

அமேசான் கோ - உங்கள் நேரத்தை சேமிக்கும் அதி நவீன சூப்பர் மார்க்கெட்

ரு சூப்பர் மார்கெட்டுக்குள் நுழைந்து விரும்பிய பொருட்களை தேர்ந்தெடுத்து சேகரித்து விட்டு பணம் செலுத்த வரிசையில் நிற்காமல், பில் போட கணிணி முன் காத்திருந்து நேரத்தை வீணாக்காமல் பொருட்களை சேகரித்து சூப்பர் மார்கெட்டை விட்டு வெளியேறும் போது தானாக நீங்கள் வாங்கிய பொருட்களுக்கான தொகை உங்கள் கணக்கில் இருந்து எடுத்து கொள்ளபட்டால் எப்படி இருக்கும், இது போன்ற ஒரு சூப்பர் மார்கெட்டை அமேசான் கோ என்ற பெயரில் அமேசான் நிறுவனம் அமெரிக்காவில் உள்ள சியாட்டில் நகரில் திறந்துள்ளது. 

இந்த செய்தி காணொளி காட்சி வடிவில் உள்ளது, காணொளி காட்சி பிடித்திருந்தால் டெக் டைம்ஸ் யூ டியுப் சானல் சப்ஸ்கிரைப் செய்யுங்கள், லைக் செய்யுங்கள்,  உங்கள் நண்பர்களுக்கு சமூக ஊடகங்கள் மூலம் டெக் டைம்ஸ் யூ டியுப் சானலை  பகிரவும் தவறாதீர்கள். 

-----------------------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர

--------------------------------------------------------
அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்க 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday, 1 February 2018

விமானம் தாமதமாக புறப்படுவது பற்றி தகவல் தரும் கூகுள் ஃபிளைட்ஸ்

குறைந்த கட்டணத்தில் விமான பயணம் செய்ய தகவல்கள் அளித்து டிக்கெட்கள் புக் செய்ய உதவும் தேடுதல் இணையதளமான கூகுள் ஃபிளைட்ஸ், தற்போது விமானங்கள்  தாமதமாக புறப்படுவது பற்றிய தகவல்களையும் அளிக்க தொடங்கியுள்ளது. இந்த சேவையை தருவதற்காக கூகுள் ஃபிளைட்ஸ் நிறுவனம் விமான சேவை வழங்கும் நிறுவனங்களான அமெரிக்கன், டெல்டா மற்றும் யூனைடெட் ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 

சில நேரங்களில் விமானங்கள் பறக்கும் நேரம் குறித்து சேமித்து வைக்கபட்டிருக்கும் தகவல்களை அடிப்படையாக கொண்டு கூகுள் இயந்திர கற்றல் வழிமுறைகளை கையாண்டும் விமானம் தாமதமாக புறப்படுவது பற்றிய தகவல்களை விமான நிறுவனங்களுக்கு தெரிவதற்கு முன்பே கூகுள் ஃபிளைட்ஸ் சரியாக அறிவித்து விடும். 

விமானம் எவ்வளவு நேரம் தாமதமாக புறப்படும் என்ற தகவலோடு கூடுதலாக தாமதத்திற்கான காரணங்களையும் (வானிலை, பயணிக்க வேண்டிய விமானம் விமான நிலையத்தை வந்தடைவதில் தாமதம்...) பட்டியலிடும், மேலும் விமானம் தாமதமாக புறப்படும் தகவல் 80 சதவிகதம் உறுதி செய்யப்பட்ட பின்பே அந்த தகவலை இணையதளத்தில் கூகுள் ஃபிளைட்ஸ் நிறுவனம் வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 