Thursday 1 February 2018

விமானம் தாமதமாக புறப்படுவது பற்றி தகவல் தரும் கூகுள் ஃபிளைட்ஸ்


குறைந்த கட்டணத்தில் விமான பயணம் செய்ய தகவல்கள் அளித்து டிக்கெட்கள் புக் செய்ய உதவும் தேடுதல் இணையதளமான கூகுள் ஃபிளைட்ஸ், தற்போது விமானங்கள்  தாமதமாக புறப்படுவது பற்றிய தகவல்களையும் அளிக்க தொடங்கியுள்ளது. இந்த சேவையை தருவதற்காக கூகுள் ஃபிளைட்ஸ் நிறுவனம் விமான சேவை வழங்கும் நிறுவனங்களான அமெரிக்கன், டெல்டா மற்றும் யூனைடெட் ஏர்லைன்ஸ் போன்ற நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. 



சில நேரங்களில் விமானங்கள் பறக்கும் நேரம் குறித்து சேமித்து வைக்கபட்டிருக்கும் தகவல்களை அடிப்படையாக கொண்டு கூகுள் இயந்திர கற்றல் வழிமுறைகளை கையாண்டும் விமானம் தாமதமாக புறப்படுவது பற்றிய தகவல்களை விமான நிறுவனங்களுக்கு தெரிவதற்கு முன்பே கூகுள் ஃபிளைட்ஸ் சரியாக அறிவித்து விடும். 


விமானம் எவ்வளவு நேரம் தாமதமாக புறப்படும் என்ற தகவலோடு கூடுதலாக தாமதத்திற்கான காரணங்களையும் (வானிலை, பயணிக்க வேண்டிய விமானம் விமான நிலையத்தை வந்தடைவதில் தாமதம்...) பட்டியலிடும், மேலும் விமானம் தாமதமாக புறப்படும் தகவல் 80 சதவிகதம் உறுதி செய்யப்பட்ட பின்பே அந்த தகவலை இணையதளத்தில் கூகுள் ஃபிளைட்ஸ் நிறுவனம் வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது. 
-----------------------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர



--------------------------------------------------------
அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்க 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்