Thursday 22 March 2018

ஆழ்கடல் ஆராய்ச்சியில் அசத்த போகும் சோஃபி - ரோபோ மீன்


டலில் நீந்தும் உண்மையான மீன் போலவே நீந்துகிறது (MIT's Computer Science and Artificial Intelligence Laboratory) CSAIL ஆய்வகத்தின் ஆராய்ச்சி குழுவினரின்  தயாரிப்பான சோஃபி என்று பெயரிடப்பட்டுள்ள ரோபோ மீன். 

ஆழ்கடலில் மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத குறுகலான அபாயகரமான பகுதிகளுக்கு சென்று ஆராய்ச்சி செய்ய இந்த ரோபோ மீன் உதவும். ரோபோ மீனின் தலைப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா ஆழ்கடல் பகுதியை அழகாக படம் பிடித்து காட்டுகிறது. 


ஒரு மின்னணு சர்க்யூட் பலகையும், லினக்ஸ் இயங்குதளத்தில் இயங்கும் மிக சிறிய கணிப்பொறியும் இந்த ரோபோ மீனின் தலைபகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. தண்ணீரில் நீந்துவதற்கு உதவும் வகையில் இதன் வால் பகுதியை அசைப்பதற்கு வால் பகுதியில் ஒரு ஹைடிராலிக் மோட்டார் பம்ப்பும் பொருத்தப்பட்டுள்ளது. 

எளிதில் வளைய கூடிய சிலிகோன் எலாஸ்டோமீட்டர் கொண்டு இதன் வால் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ மீனின் இயக்கத்தை நீச்சல் வீரர்கள் கட்டுபடுத்துவதற்கு ஒரு ரிமோட் கண்ட்ரோல் சாதனமும் உண்டு. இந்த ரிமோட் தண்ணீரில் அல்ட்ராசோனிக் சிக்னல்கள் மூலம் ரோபோ மீனோடு தொடர்பு கொள்கிறது.  



-----------------------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர



--------------------------------------------------------
அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்க 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்