­

Thursday, 29 March 2018

துபாயில் பயன்பாட்டுக்கு வந்துள்ள ஏர் டாக்ஸி



துபாய் நாட்டில் தற்போது ஏர் டாக்ஸி பொது மக்களின் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. நமது நாட்டில் ஆட்டோ, டாக்ஸி வாடகைக்கு கிடைப்பது போல் இப்போது துபாய் நாட்டில் ஏர் டாக்ஸி கிடைக்கிறது. ஒருவர் மட்டும் பயணம் செய்யும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.  அதிகபட்சமாக நூறு கிலோ எடை வரை இதில் கொண்டு செல்லலாம் (பயணம் செய்யும் மனிதனின் எடையும் சேர்த்து தான்) 


ஓட்டுனர் இல்லாமல் தானாக இயங்க கூடிய (கட்டுப்பாட்டு அறையில் இருந்து இந்த ஏர் டாக்ஸியை கட்டுப்படுத்தலாம்)  இந்த தானியங்கி ஏர் டாக்ஸியில் நாற்பதில் இருந்து ஐம்பது கிலோமீட்டர் தூரம் வரை இதில் பயணிக்கலாம். 

 பயணி ஏர் டாக்ஸியில்  அமர்ந்த பின்னர், பயணிக்க வேண்டிய இலக்கை தொடுதிரையில்       தெரியும்       மேப்பில்     தேர்வு    செய்தவுடன்   பறக்க 
தொடங்குகிறது. இந்த ஏர் டாக்ஸியில் பொருத்தபட்டுள்ள பேட்டரி சக்தி கொண்டு தொடர்ந்து அரை மணி நேரம் வானில் பறக்க முடியும். டிராபிக் தொந்தரவு எதுவுமில்லாமல் பயணிக்க வேண்டிய இடத்துக்கு தாமதமில்லாமல் சென்று சேர இந்த ஏர் டாக்ஸி பயன்படும் என்று நம்பலாம்.  
-----------------------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர



--------------------------------------------------------
அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்க 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday, 22 March 2018

ஆழ்கடல் ஆராய்ச்சியில் அசத்த போகும் சோஃபி - ரோபோ மீன்


டலில் நீந்தும் உண்மையான மீன் போலவே நீந்துகிறது (MIT's Computer Science and Artificial Intelligence Laboratory) CSAIL ஆய்வகத்தின் ஆராய்ச்சி குழுவினரின்  தயாரிப்பான சோஃபி என்று பெயரிடப்பட்டுள்ள ரோபோ மீன். 

ஆழ்கடலில் மனிதர்கள் எளிதில் செல்ல முடியாத குறுகலான அபாயகரமான பகுதிகளுக்கு சென்று ஆராய்ச்சி செய்ய இந்த ரோபோ மீன் உதவும். ரோபோ மீனின் தலைப்பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கேமரா ஆழ்கடல் பகுதியை அழகாக படம் பிடித்து காட்டுகிறது. 


ஒரு மின்னணு சர்க்யூட் பலகையும், லினக்ஸ் இயங்குதளத்தில் இயங்கும் மிக சிறிய கணிப்பொறியும் இந்த ரோபோ மீனின் தலைபகுதியில் பொருத்தப்பட்டுள்ளது. தண்ணீரில் நீந்துவதற்கு உதவும் வகையில் இதன் வால் பகுதியை அசைப்பதற்கு வால் பகுதியில் ஒரு ஹைடிராலிக் மோட்டார் பம்ப்பும் பொருத்தப்பட்டுள்ளது. 

எளிதில் வளைய கூடிய சிலிகோன் எலாஸ்டோமீட்டர் கொண்டு இதன் வால் பகுதி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ரோபோ மீனின் இயக்கத்தை நீச்சல் வீரர்கள் கட்டுபடுத்துவதற்கு ஒரு ரிமோட் கண்ட்ரோல் சாதனமும் உண்டு. இந்த ரிமோட் தண்ணீரில் அல்ட்ராசோனிக் சிக்னல்கள் மூலம் ரோபோ மீனோடு தொடர்பு கொள்கிறது.  



-----------------------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர



--------------------------------------------------------
அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்க 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Thursday, 8 March 2018

சீனாவை அசத்தும் தண்ணீரில் மிதக்கும் ஸ்மார்ட் போன் வீடியோ விளம்பரம்



சீனாவை சேர்ந்த ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள வீடியோ விளம்பரம் அந்த நாட்டில் வைரல் ஆகி வருகிறது, அந்த ஸ்மார்ட்போனில் அப்படி என்ன சிறப்பு என்று கேட்கிறீர்களா? அது வாட்டர்ப்ரூஃப், ஷாக்ப்ரூஃப் கொண்டது மட்டுமல்ல சிங்கிங் ப்ரூஃப்பும் (தண்ணீரில் மிதக்கும்) கொண்டுள்ளது. ஆனால் விளம்பரம் வைரல் ஆனது அந்த  ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்களால் மட்டுமல்ல விளம்பரத்தை ஒரு முறை பாருங்கள் உங்களுக்கே புரியும். 

-----------------------------------------------------
முந்தைய பதிவுகள்
------------------------------------------------------
சமூக ஊடகங்களில் பின் தொடர



--------------------------------------------------------
அமேசான் நிறுவனத்தில் பொருட்கள் வாங்க 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்