Wednesday, 29 November 2017

பிளாஸ்டிக் பாட்டில் இப்படியும் பயன்படுத்தலாம்


வீட்டில் வீணாக கிடக்கும் பிளாஸ்டிக் பாட்டில்களையும் அதன் மூடிகளையும் கொண்டு ஐந்து பயனுள்ள பொருட்களை தயாரிக்கும் முறை கொடுக்கப்பட்டுள்ளது, செய்து பாருங்கள்...  

தூள் உப்பு கொட்டும் மினி பாக்ஸ்:  
இரண்டு சிறிய பிளாஸ்டிக் பாட்டில் மூடிகளை ஒட்டி செய்யும் அழகான உப்பு கொட்டும் மினி பாக்ஸ்.  

சார்ஜரோடு போன் வைக்க ஸ்டாண்ட்:
பிளாஸ்டிக் பாட்டில் அடிபாகத்தை கொண்டு போனை சார்ஜ் போடும்போது போனை சார்ஜரோடு பொருத்தி வைக்க ஸ்டாண்ட்.  

மொபைல் போன் டார்ச் லைட்:
பாட்டில் மூடியின் மேல் பகுதியை வட்டமாக வெட்டி கொண்டு மொபைல் போன் டார்ச் லைட்டில் ஒட்டி ஒளியை சீராக ஒரே இடத்தில் போகஸ் செய்யும் கருவி.  


பிளாஸ்டிக் பாட்டில் மூடி கொண்டு விளையாட்டு பொருள்:
இரண்டு பிளாஸ்டிக் பாட்டில் மூடிகளை நடுவில் துளையிட்டு ஒட்டி ஒரு சிறு ரப்பர் பேண்டு கொண்டு சிறு குச்சிகளை அம்பு போல் எய்ய செய்யும் விளையாட்டு கருவி.

பிளாஸ்டிக் பாட்டில் மூடி கொண்டு ஸ்மார்ட் போனை வைக்க ஸ்டாண்ட்:
பிளாஸ்டிக் பாட்டில் மூடியை கத்தி கொண்டு வெட்டி சிறிய பிளவு ஏற்படுத்தி அதில் ஸ்மார்ட் போனை காணொளி காட்சிகள் பார்க்கும்போது பொருத்தி வைக்க ஸ்டாண்ட்.

Wednesday, 22 November 2017

செய்து பாருங்கள்: ஸ்மார்ட்போன் ப்ரொஜெக்டர்

குண்டு பல்பு பயன்படுத்தி ஸ்மார்ட்போன் ப்ரொஜெக்டர் செய்முறை



தேவையான பொருட்கள்:

(ஷூ) காலணி வைக்கும் அட்டைபெட்டி ஒன்று

ஒரு குண்டு பல்பு (மேல்பாகம் திறக்கப்பட்டு உள்ளிருக்கும் பிளமென்ட் நீக்கப்பட்டிருக்க வேண்டும்)

குண்டு பல்பில் நிரப்ப தண்ணீர்

ஸ்மார்ட் போன் அட்டைபெட்டியில் பொருத்த ஒரு சிறு அட்டை மற்றும் செல்லோடேப் (அல்லது) ஸ்மார்ட்போன் பொருத்த தெர்மகோல் அட்டை


முதலாவது குண்டு பல்பு அளவை காலணி அட்டைபெட்டியின் ஒரு பக்கத்தில் வைத்து ஸ்கெட்ச் பென்னில் வரைந்து கொண்டு பின்பு குண்டு பல்பை அட்டைபெட்டியில் பொருத்தும்படி வெட்டி கொள்ளவும்.

வெட்டப்பட்ட அட்டைபெட்டியின் ஒருபுறத்தில் குண்டு பல்பை பொருத்தவும்.

பொருத்தப்பட்ட குண்டு பல்பில் தண்ணீர் ஊற்றி நிரப்பவும்.

சிறு அட்டையில் உங்கள் ஸ்மார்ட்போனை செல்லோடேப் கொண்டு ஒட்டவும்.

ஸ்மார்ட் போனின் ஒளி அளவை அதிகமாக வைத்து விட்டு, ஸ்மார்ட்போன் ஒட்டப்பட்ட அட்டையை ஏற்கெனவே பல்பு பொருத்தபட்டிருக்கும் அட்டைபெட்டியின் உள்ளே எதிர்புறத்தில் வைக்கவும்.

சுவரில் இப்போது ஸ்மார்ட்போன் காட்சி தெரிய துவங்கும், சுவரில் காட்சி தெளிவாக தெரிய ஸ்மார்ட்போன் ஒட்டப்பட்ட அட்டைக்கும் பல்புக்கும் இடையே உள்ள நீளத்தை அதிகமாக்கியும் குறைத்தும் பார்க்கவும். சுவரில் காட்சி தெளிவாக தெரிய தொடங்கிய உடன் அட்டைபெட்டியை மூடிவிடவும்.

குறிப்பு: இதே செய்முறையை குண்டு பல்பு பயன்படுத்துவதற்கு பதில் பூதக்கண்ணாடி பயன்படுத்தியும் செய்யலாம். அட்டைபெட்டியில் குண்டு பல்பு பொருத்துமிடத்தில் பூதக்கண்ணாடியை பொருத்தி விடலாம். மேலும், ஸ்மார்ட்போனை அட்டையில் ஓட்டுவதற்கு பதில் தெர்மகோல் அட்டையில் அளவாக வெட்டி ஸ்மார்ட்போனை பொருத்தியும் பயன்படுத்தலாம்.

பூதக்கண்ணாடி பயன்படுத்தி ஸ்மார்ட்போன் ப்ரொஜெக்டர் செய்முறை

-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday, 15 November 2017

கேக் முதல் கேமரா வரை அதிர வைக்கும் ஐந்து கண்டுபிடிப்புகள்

பான்கேக்பாட் (உலகின் முதல் 3டி  பான்கேக்  சுடும் பிரிண்டர்)
தோசையை வட்டமாக சுடுவதே நமக்கு பெரும்பாடாக இருக்கும் நிலையில், விதவிதமான 3டி வடிவங்களில் நாம் தாளில் வரையும் உருவங்கள் நம் கண்களுக்கெதிரே பான் கேக்காக மாறும் அதிசயத்தை நிகழ்த்துகிறது இந்த புதிய கண்டுபிடிப்பான பான்கேக்பாட். முதலில் நாம் விரும்பும் உருவங்களை தாளில் வரைந்து மெமரி கார்டில் சேமித்து வைத்து கொள்ள வேண்டும் பின்பு, 
பான் கேக் மாவை பான்கேக்பாட் இயந்திரத்தில் நிரப்பி விட்டு பிரிண்ட் பொத்தானை அழுத்தினால் நாம் வரைந்த உருவங்களுக்கேற்ப மாவு நீளமான கல்லின் மேல் தானியங்கி அச்சுப்பொறியால் ஊற்றப்படுகிறது. சில நிமிடங்களில் சூடான  பான்கேக் தயார்.


நிக்ஸி (பறக்கும் டிரோன் கேமரா)
நாம் நடக்கும் போது ஒரு கேமரா நம்மை பின் தொடர்ந்து படம் பிடித்து கொண்டே வந்தால் எப்படி இருக்கும், நாம் செய்யும் செயல்களை படம் பிடிக்க கேமராமேன் தேவையில்லை நிக்ஸி   நம்மை தொடர்ந்து பறந்து பறந்து படம் பிடிக்கிறது, பறக்கும் டிரோன் கேமராவான நிக்ஸி.

ஜூடா  பாக்கெட் பிரிண்டர்:
தாளின் மேல் இந்த கையடக்க பிரிண்டரை வைத்துவிட்டால் தாளில் நாம் சேமித்த படங்கள், எழுத்துக்கள் அழகாக அச்சாகி விடுகிறது. மொபைலில் நாம் சேமித்துள்ள கோப்புகளை பிரிண்ட் செய்ய சரியான தேர்வு இந்த ஜூடா  பாக்கெட் பிரிண்டர்.

இல்லூம் ஆர்க்லைட்டர்:
தீப்பெட்டிக்கு மாற்றாக வந்துள்ளது இல்லூம் ஆர்க்லைட்டர், சந்தையில் கிடைக்கும் மற்ற லைட்டர்கள் போல பயன்படுத்தி தூக்கி எறியும் லைட்டர் அல்ல இந்த இல்லூம் ஆர்க்லைட்டர், இந்த லைட்டரில் உள்ள லித்தியம் அயான் பேட்டரியை மீண்டும் மீண்டும் சார்ஜ் செய்து லைட்டரை பயன்படுத்தும் வகையில் தயாரித்துள்ளனர். 

சனோ (பறக்கும் டிரோன் கேமரா)
நிக்ஸி டிரோன் கேமராவை போல அதே வகை செயல்பாடுகள் கொண்ட பறக்கும் டிரோன் கேமரா தான் சனோ. ரிமோட் கண்ட்ரோல் மூலம் இந்த பறக்கும் டிரோன் கேமராவை கட்டுபடுத்தி நாம் விரும்பும் புகைப்படங்கள், வீடியோக்களை எடுக்கலாம். 
-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday, 8 November 2017

ஷாக் அடிக்காத மின்சாரம் - ஐந்து அரிய கண்டுபிடிப்புகள்

வீடுகளுக்கு தரப்படும் மின் இணைப்பில் தவறுதலாக எப்போதாவது தெரியாமல் நம் கை பட்டு விட்டால் உடல் பதறி சட்டென்று கையை இழுத்து கொண்டிருப்போம், மின்சாரம் பாயும் வயர்களையோ, பொருட்களையோ தெரியாமல் மிதித்து விட்டால் அதிகளவு மின்சாரம் உடலில் பாய்ந்து மனிதர்கள் உடல் கருகி மரித்து போனதையும் நாம் பார்த்திருக்கிறோம். இன்றைய நாகரிக உலகத்தில் மின்சாரத்தை பயன்படுத்தாமல் நாம் வாழ முடியாது. ஒவ்வொரு நாளும் மின்சாரத்தின் தேவை அதிகரித்து கொண்டே செல்கிறது, ஆனால் சில நேரங்களில் மனித தவறுகளால், மின்சாரம் இப்படி உயிர் கொல்லியாக மாறி உயிர்களை காவு வாங்கி விடுகிறது.



இந்த ஷாக் அடித்து நிகழும் மரணங்களை பார்க்கும் போதெல்லாம் எவ்வளவோ முன்னேறி இருக்கும் விஞ்ஞான உலகில் இந்த ஷாக் பிரச்சினைக்கு தீர்வு கண்டுபிடிக்க முடியாதா என்று வேதனை பட்டிருப்போம், நிஜமாகவே தொட்டால் ஷாக் அடிக்காத கரண்ட்டை விஞ்ஞானி திரு. உமா மகேஷ் அவர்கள் கண்டுபிடித்துள்ளார்.  

ஷாக் அடிக்காத கரண்ட்(நானோ ட்ரான்ஸ்பார்மர்) மட்டுமல்ல  ரீசார்ஜ் செய்ய தேவைபடாத நானோ பேட்டரி, நானோ ஏசி, நானோ பிரிஜ், நானோ வாட்டர் கண்டென்சர் (காற்றிலிருந்து தண்ணீர் தயாரிப்பு) என்று முத்தான ஐந்து கண்டுபிடிப்புகள் பற்றியும் அந்த கருவிகளின் செயல்பாடு பற்றியும் விளக்கம் கொடுத்திருக்கிறார் திரு. உமா மகேஷ். நோய்களை இயற்கையான முறையில் தீர்க்கும் ஹீலர் பாஸ்கர் அவர்கள் திரு. உமா மகேஷ் அவர்களோடு உரையாடி இந்த ஐந்து அரிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தும் காணொளி காட்சி:

-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்

Wednesday, 1 November 2017

சியோமி மி மிக்ஸ் 2 - அறிமுகம்

சீனாவை சேர்ந்த சியோமி ஸ்மார்ட் போன் தயாரிப்பு நிறுவனம் கடந்த செப்டம்பர் மாதம் எம்ஐ மிக்ஸ் 2 என்ற புதிய ஸ்மார்ட்போனை வெளியிட்டுள்ளது.



எம்ஐ மிக்ஸ் 2 ஸ்மார்ட்போன் 1080*2160 பிக்ஸல்கள் கொண்ட 5.99 இன்ச் முழு ஹெச்டி தொடுதிரையை (ஒரு இஞ்சுக்கு 403 பிக்ஸல்கள்) கொண்டுள்ளது. பெசல்-லெஸ் வகையை சேர்ந்த இந்த ஸ்மார்ட் போன் 6 ஜிபி ரேமும், 128 ஜிபி உள்ளக நினைவகத்தையும் கொண்டுள்ளது. (64 ஜிபி, 128 ஜிபி, 256 ஜிபி உள்ளக நினைவகங்களுடன் உள்ள மாடல்களும் வெளிவந்துள்ளது) 

 ஒரே நேரத்தில் நிறைய ஆப்ஸ்களை பயன்படுத்தும் வகையில் சக்தி வாய்ந்த அக்டோகோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 835 சிப்செட் பிராசெஸருடன் வெளி வந்துள்ளது. (ஸ்பெஷல் எடிஷனாக வெளிவந்துள்ள செராமிக் எடிசன் மாடல் எம்ஐ மிக்ஸ் 2 ஸ்மார்ட் போனில் மட்டும் 8ஜிபி ரேம் உள்ளது) 

 கேமெராவை பொறுத்தவரை பின்புறத்தில் 12 மெகாபிக்சல் சென்சார் கேமரா கொண்டுள்ளது. இந்த பின்புற கேமெரா 5P லென்ஸ், f/2.0, 4-ஆக்சிஸ் OIS, PDAF மற்றும் HDR வசதிகளை பெற்றுள்ளது. முன்புறத்தில் செல்பி எடுக்க வசதியாக 5 மெகாபிக்சல் கேமெரா கொண்டுள்ளது. 

 இரட்டை சிம் (நானோ சிம்) வசதி கொண்டுள்ள எம்ஐ மிக்ஸ் 2 ஆண்ட்ராய்டு இயங்குதளம் கொண்டு இயங்குகிறது. 3400 எம்ஏஹச் சக்தி கொண்ட பேட்டரி மூலம் இயக்கப்படும் எம்ஐ மிக்ஸ் 2 ஸ்மார்ட் போன் 4G LTE, வை-ஃபை, புளூடூத், ஜிபிஎஸ் மற்றும் யூஎஸ்பி வசதிகளை கொண்டுள்ளது. 

போனில் சென்ஸார்களை பொறுத்தவரை காம்பஸ் மேக்னெடோமீட்டர், ப்ராக்ஸிமிட்டி சென்சார், சுற்றுச்சூழல் ஒளி உணரும் சென்சார், கைரோஸ்கோப் மற்றும் பாரோமீட்டர் கொண்டுள்ளது.

-----------------------------------------------------------
தமிழர் டைம்ஸ் இதழ்கள்